Monday, November 21, 2011

ஏன் கதைகள்?


சில நாட்களுக்கு முன்பு எனது நண்பரின் வலை  பதிவில் ஒருவர் மறுமொழி இட்டிருந்தார் கற்பனை கதைகளால் தான் ஒரு மதமே உருவானது தங்கள் மதத்தில் கற்பனை கதைகளுக்கே இடமில்லை என்று எதையுமே ஆராயாமல் தனது கற்பனையை மறுமொழியாய்(கதையாய்) எழுதி இருந்தார். அவருக்கு என் நன்றிகள். 

இப்பொழுது தனியாக ஜென் கதைகள் என்ற தலைப்பில் இதை இடுவதற்கு காரணம் நீண்ட தேடலுக்கு பிறகு தோன்றியது.  ( நாங்களும் யோசிப்போம்ள) 

ஏன் கதைகள்?

ஒரு வயதான மனிதர் மிக உயர்ந்த மலை உச்சியில் தனியே வாழ்ந்து வந்தார்.தினமும் காலை வேளையில் அந்த மலையின் உச்சியில் உயரமான செங்குத்தான பாறையின் மீது அமர்ந்து சுற்றியுள்ள மலைகளையும் காடுகளையும் கண்டு ரசிப்பது அவர் வழக்கம் . ஒருநாள் அதே போல  அந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய முற்படுகையில் அந்த கடினமான உயரிய பாறையின் அடிவாரத்தில் எதோ ஒன்று மின்னுவதை கண்டார். வயதானவராய்   இருந்த போதும் அவருடைய கண்களுக்கு அது என்ன என்பதை கணிக்க முடிந்தது. அது ஒரு பெரிய தங்கத்தினால் ஓரங்கள் இளைக்க பட்ட கரிய பேழை. அந்த பாறையின் மீது அமர்ந்து கொண்டே அந்த பேழை எப்படி அங்கு வந்தது?, அதில் என்ன இருக்கும்? என்று யோசிக்க தொடங்கினார்...

நல்ல கதைகளை போல் வேறு எதுவும் நம் கவனத்தை ஈர்க்காது. தொலைக்காட்சி, திரைப்படம் ,வானொலி, புத்தகங்கள் போன்ற எதுவும் இல்லா காலத்தில். முக்கியமாக கதைகள் அவர்களுக்கு கற்பிக்கவும் கேளிக்கைக்கும் உதவியது. இன்று பெரிய நிறுவனங்களில் நிர்வாகிகள் உணவு அருந்துவது போல் குகையில் வாழ்ந்த மனிதர்களுக்கு கதைகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. கதைகள் நம் குருதியுடன் கலந்த ஒன்று. நமக்கு கதாபாத்திரம், நடந்த சூழல்,கதையின் உச்சகட்டம்(கிளைமாக்ஸ்), கதையின் கரு, கதையில் வரும் சிலிரிப்பு (த்ரில்)  கதையில் அவர்கள் அடைந்த துன்பங்கள் வெற்றிகளை ஆழமாக அடுத்தவரை ஈர்க்கும் படி மிகைப்படுத்தி கூறுவதில் நமக்கு அலாதி பிரியம்.எல்லா இலக்கியங்கள் மற்றும் ஊடகங்களின் அடிப்படை நல்ல கதை சொல்வதின் விரிவாக்கமே. கதை சொல்வதின் முக்கியத்துவம் நீங்கள் மற்றவர் முன்னிலையில் சொல்லும்   போது அவர்களை நேரடியாக பார்க்கவும்,  கருத்துகளை கேட்கவும் , அவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவும்  முடியும். கதை சொல்ல அதை கேட்க மற்றவர் தேவை. தனியாக கதை சொல்லிக்கொள்ளவது அல்ல அன்றி நீங்கள் மனநோயாளியாக இல்லா பட்சத்தில்... (அது தனி கதை) .

இங்கே நான் ஜென் கதைகள் எடுத்ததற்கு காரணம்? மனித வரலாற்றில் காலங்கள் கடந்து நிற்கும் அவை மனிதனின் உள்நிலை (insight), ஆன்மிகம்,பிரபஞ்சம் ஆகியவற்றை நமக்கு ஜென் மற்றும் தாவோ(TAO ) கதைகள், உணர்த்தலாம்?!(May  be ). அல்லது பொழுது போக்கிற்கு. சந்தேகம் இன்றி அந்த கதைகள் நமக்கு வாழ்க்கை மற்றும் இறப்பை பற்றிய உண்மைகளை உணர்த்தும்.ஜென் துறவிகள் மலை உச்சியில் தங்கள் மடத்திற்கு மட்டும் என்று இரகசியமாக இல்லாமல் அனைவருக்கும் பயன்படும் படி கூறி சென்றவைகள். நாமும் நம் தேடலில் பயன்படுமா பார்ப்போமே .

ஒவ்வொரு கதையிலும் உங்கள் பார்வை உங்கள் கருத்துகள், நீங்கள் உணர்ந்த அல்லது புரிந்த கொண்டவை மற்றவர்களிடம் இருந்து மாறுபடலாம் அது நம் தேடலில் மறுமொழியாக பதிவு செய்தால் அனைவருக்கும் பயன்படும். நன்றிகளுடன்.

யாருடா இவன் கடவுள்ன்னு ஆரம்பிச்சான், எதுக்குன்னு கேட்டான், நம்ம யாருன்னு கேட்டான் இப்போ கதை சொல்ல போய்ட்டான்னு யோசிக்கறீங்களா? அது விளம்பர இடைவேளை மாதிரி. நம்ம நோக்கம், குறிக்கோள் கடவுளை கண்டுபிடிக்கறது அதில் இருந்து பின் வாங்கறதா இல்லை. எங்க போனாலும் திரும்ப நம்ம தலைப்புக்கு வந்திடுவோம்ல. போன பதிவு கடைசியல் ஏதோ கேட்டேன் நான் என்றால் ஆத்மாவா? இல்ல உயிரா? நான் (நாம்) யார்?  யாராவது எதாவது பதில் சொல்லுவாங்களான்னு காத்து இருக்கேன். அது வரை எதாவது சொல்லணும் இல்ல அதுக்கு தான் ஒரு கதை சொன்னேன்.கொஞ்சம் காத்து இருந்து தான் பார்ப்போமே..    
         
                        


  

3 comments:

  1. அருமையான விளக்கம் நண்பரே...வேதங்களில் சிறு கதைகள் ஏன் என எல்லோருக்கும் புரியும் படி எழுதியுள்ளிர்கள்...!!!!

    ReplyDelete
  2. நன்றாக தேடுங்கள். நானும் கூட வருகிறேன்.

    ReplyDelete
  3. நண்பர் ஷன்கர் அவர்களே,உங்கள் ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் மறுமொழிகளுக்கும் மிக்க நன்றி(நம்ம agreement பதிவுக்கு வெளிய மட்டும் ;-)).

    நண்பர் தமிழன் அவர்களே உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி. வாங்க தேடுவோம்.. ஆனது ஆச்சு.. பார்த்திருவோம்.

    ReplyDelete