Tuesday, November 29, 2011

ஒரு முட்டாள்!


என்னடா இது இன்னும் யாரும் நாம கேட்ட கேள்விக்கு(நான்(நாம்)  யார்?)  பதில் சொல்லவில்லை.ஒருவேளை கஷ்டமான கேள்வி கேட்டுடோமோ? இல்ல நமக்கு சொன்னா புரியாதுன்னு யாரும் சொல்லலையோ? இல்ல யாருக்கும் பதில் தெரியாலையா?நான்னா நான் தான் இதை எப்படி என்னனு சொல்றது?ஏதோ ஒண்ணு நீ என்ன சொல்லணுமோ அதை சொல்லு இருக்கறதை(பிரச்சனையை ) யோசிக்கவே நேரம் இல்ல இதுல வேற நான் யார் அப்படின்னு யோசிச்சு பதில் சொல்லணுமாம்( mind  வாய்ஸ் கேட்குது). ஒரு சின்ன கதையை பார்த்திட்டு அப்பறம் நம்ம ஏன் நம்மை தேடறோம்  பார்போம்.

ஓங்கிய பெரும் காடு... அங்கே...  (ஹிஹி பாட்டு எல்லாம் இல்ல)அந்த காட்டின் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். அவன் நாள்தோறும் காட்டிற்கு சென்று விறகு வெட்டி,விற்று வரும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தான். அவன் காட்டில் நுழையும் முன் ஒரு அரசமரம் இருந்தது. அந்த அரச மரத்தின் நிழலில் ஒரு ஞானி அமர்ந்து இருந்தார். அவர் எல்லா நாட்களிலும் அங்கேயே அமர்ந்து இருப்பார். இவன் தினமும் தன் வேலைக்கு போகும் முன் அவரை வணங்கிவிட்டு போவாது அவன் வழக்கம். தினமும் அவன் வணங்கும் போதெல்லாம் அந்த ஞானி அவனை பார்த்து 'நீ ஒரு முட்டாள்' என்று மட்டும் சொல்வார். வேறு எந்த வாக்கியமோ ஆசிர்வாதமோ  அவர் சொல்லவே இல்லை. ஒவ்வொரு  முறையும் ஆவலுடன் சென்று ஆசி வாங்கும் போதெல்லாம் அவன் கேட்ட ஒரே வாக்கியம் 'நீ ஒரு முட்டாள்'.

ஒரு நாள் நேரடியாகவே அந்த விறகுவெட்டி கேட்டு விட்டான். தினம் என்னை 'நீ ஒரு முட்டாள்' அப்படின்னு சொல்றீங்களே ஏன் அப்படி சொல்றீங்கன்னு கேட்டான்.அதுக்கு அந்த ஞானி இந்த காட்டிற்குள் தினம் சுற்றி கொண்டு தினம் மரம் வெட்டி சென்று விற்று வாழ்க்கை நடத்துற.  இந்த காட்டில் இன்னும் கொஞ்ச தூரம் உள்ள போன அங்க ஒரு செம்பு சுரங்கம் இருக்கு. நீ அந்த செம்பு சுரங்கத்தை பாத்திருந்தா இப்படி தினம் தினம் வரவேண்டியது இல்ல. செம்பு எடுத்துட்டு போய் விற்றால் வாரத்துக்கு ஒரு தடவை வந்தா போதும். அதை பார்க்காம தினம் இப்படி வந்து மரம் வெட்டிகிட்டு இருக்கயே அதனால தான் 'நீ ஒரு முட்டாள்'. 

நமக்கு இந்த காட்டுல எல்லா இடமும் தெரியும் அப்படி இருக்கும் போது எப்படி செம்பு சுரங்கம் இருக்கறது தெரியாம போச்சு இவர் சொல்றதை நம்பறதா வேணாம்மா சரி இன்னும் கொஞ்சம் உள்ள போய் தேடி தான் பார்ப்போமே அப்படின்னு காட்டிற்குள் போய் கொஞ்சம் விழிப்போட தேடினான் . அவர் சொன்ன மாதிரியே ஒரு செம்பு சுரங்கம் இருந்தது. ஒரே சந்தோசம் தான் செம்பு கிடைச்சது. அது போக அவர் ஏன் என்னை முட்டாள் அப்படின்னு சொன்னார்ன்னு இப்போ விளங்கிச்சு. இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா இத்தனை நாள் தினம் வந்து கஷ்டப்பட்டு இருக்கவேண்டியது இல்லல.  

அன்றிலிருந்து வாரம் ஒருமுறை மட்டும் அந்த காட்டிற்கு வந்து செம்பு எடுத்து போய் விற்று வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான். எப்பொழுதும் போல் காட்டிற்கு உள்ள போகறதுக்கு முன் அந்த ஞானியை பார்த்து வணங்கி விட்டு தான் போனான். அந்த ஞானி 'நீ ஒரு முட்டாள் தான்' சொல்றதை நிறுத்தவே இல்ல. விறகு வெட்டிக்கு குழப்பமா போச்சு நீங்க சொன்ன மாதிரி நான் தான் செம்பு சுரங்கத்தை கண்டு புடுச்சிட்டேனே திரும்பவும் ஏன் "நீ ஒரு முட்டாள் 'ன்னு சொல்றீங்கன்னு கேட்டான்.   

இப்போ அந்த ஞானி விறகு வேட்டியை பார்த்து நீ இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் அங்க வெள்ளி சுரங்கம் இருக்குன்னு சொன்னார்.

அவனுக்கு ஆச்சிரயம்மா இருந்தது. இருந்தும் அந்த ஞானியை பார்த்து வெள்ளி சுரங்கத்தை பத்தி முன்னமே  சொல்லி இருக்கலாம்லன்னு கேட்டான். அதுக்கு ஞானி. நான் செம்பு சுரங்கத்தை பத்தி சொல்லும் போதே நீ நம்பல அப்படி இருக்கும் போது வெள்ளி சுரங்கத்தை பத்தி சொன்னா எப்படி நம்புவ? இப்போ இன்னும் கொஞ்சம் உள்ள போய் தேடி பார். அப்படின்னு சொல்லி அனுப்பினார்.     

எனக்கு பழக்கப்பட்ட காட்டில் ஏதோ செம்பு சுரங்கம் இருக்கறதை வேணா பார்க்காம விட்டிருக்கலாம் அதுக்காக வெள்ளி சுரங்கம் எல்லாம் எப்படி இருக்கும்? கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் கொஞ்சம் நம்பிக்கை உணர்வு அவனிடம் தோன்றி இருந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்ற தேடிய போது வெள்ளி சுரங்கத்தையும் கண்டுபிடித்தான்.

வெள்ளிகளை எடுத்துக்கொண்டு ஞானி இடம் திரும்பி வந்தான். இப்பொழுது நான் மாதம் ஒருமுறை வந்தால் போதும் ஆனால் உங்களை அடிகடி பார்க்க முடியாது உங்களை பிரியறது கஷ்டமா இருக்கு அதுவும் இல்லாமல் நீங்க சொல்ற "நீ ஒரு முட்டாள்' வாக்கியத்தை இனி கேட்க முடியாது. நீங்க சொல்லும் அந்த வாக்கியம் என்னக்கு பிடிச்சு போச்சு.  அதனால் வருத்தமா இருக்குன்னு சொன்னான். அதை கேட்ட ஞானி இப்போவும் நான் அதை தான் சொல்லறேன் 'நீ சர்வ நிச்சயமா முட்டாளே தான்' ன்னு சொன்னார். நான் வெள்ளி சுரங்கத்தை கண்டுபிடிச்ச பிறகுமா நான் முட்டாள்? ஆமாம் சந்தேகமே இல்லாம 'நீ முட்டாள் தான்' இன்னும் கொஞ்சம் உள்ள போனால் அங்க தங்க சுரங்கம் இருக்கு அதனால ஒரு மாதம் கழிச்சு வரவேண்டியது இல்ல நாளைக்கே வா-ன்னு சொல்லி அனுப்பினார்.

இப்போ அவனுக்கு அந்த ஞானி சொல்வதில் சந்தேகம் வந்திடுச்சு. அப்படி தங்க சுரங்கம் இருந்தால் இவர் ஏன் இங்க உட்காந்துகிட்டு இருக்கார் ஒரு வீடு இல்ல, மழைக்கு ஒரு குடை இல்ல, குளிருக்கு ஒரு கம்பளியோ ஒரு போர்வையோ கூட இல்ல,ஒரு நல்ல துணி இல்ல யாரவது வந்து உணவு கொடுத்தா உண்டு  இல்லாட்டி   வாரத்துக்கு ஒருதடவ ஊருக்குள்ள போய் பிச்சை எடுத்து சாப்பிடறார் இவ்வளவு கஷ்டபட்டுட்டு இருக்கார். இவர் கண்டிப்பா நம்மள கேலி பண்றார்ன்னு நினைச்சான். இருந்தாலும் அவர் சொல்றது உண்மையா மட்டும் தான் இருந்திருக்கு. இவரும் வித்தியாசமான ஆளா தான் இருக்கார். அவர் சொல்ற மாதிரி தங்க சுரங்கம் இருந்தால்?யாருக்கு தெரியும். ஒண்ணும் நஷ்டம் இல்ல அதனால தேடி போவோம்ன்னு முடிவு பண்ணினான்.               

அந்த காட்டின் உள்ளே இன்னும் சிறிது தூரம் தேடிச் சென்ற போது அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அவர் சொன்னது போலவே ஒரு தங்க சுரங்கம். வாழ் நாள் முழுவதும் இந்த காட்டிலேயே மரம் வெட்டி சுற்றி திரிந்த நமக்கு இந்த தங்க சுரங்கம் பற்றி தெரியவில்லை ஆனால் இந்த காட்டின் ஆரம்பத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் அவருக்கு எப்படி தெரிந்தது. 

ஒரு பை நிறைய தங்கத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தான். இனியாவது 'நீ ஒரு முட்டாள்'ன்னு சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன்னு சொன்னான்.

அதற்கு அவர், “அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவு இல்ல, அதனால் நாளை வா.” என்றார்.  


அவன், “என்னது தங்கம் கிடைத்தது முடிவில்லையா? , ஆரம்பம்தானா! என வியந்தான். அதற்கு அவர், “ஆம், நாளை இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே போனால் அங்கே வைரங்கள் இருக்கு. ஆனால் அதுவும் முடிவல்ல,


ஆனால் நான் உனக்கு அதிகப்படியா எதுவும் சொல்லமாட்டேன். ஏன்ன நான் சொல்லிட்டா உன்னால இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை பார்.” என்றார்.

அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் தான்னு சொல்றாரே, வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.



அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். “வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் தூங்கிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா.” என்றார். 


அவன் “வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்.”எனக் கேட்டான். அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று!இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்றார்.


அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம்,“நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது.” என்றான்.


அவர் சிரித்துக் கொண்டே, “இன்னும் நீ முட்டாள்தான்.” என்றார்.


அவன்,“இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை”என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே இருக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்,” என்றார்.  


அவன் வைரங்களை கீழே போட்டான். “நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை.” என்றான்.   


அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி. தகவல் அறிவுநிரம்பிய(நம்ம தான்)  ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல. 


விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.  


ஞானி அவனை உலுக்கி, “இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ......... இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்.”என்றார்.  


விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.


அவன் ஞானியைப் பார்த்து, “நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டான்.


அதற்கு அவர். “நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன். காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும். எனவே சரியான காலம் முக்கியம்” என்றார்.   

  
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ( நம்ம கருத்த சொல்லவேண்டாம்? அதுக்கு தான் ).

'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
-சிவவாக்கியர் பாடல்-494


இந்த பாடலுக்கும் மேலே உள்ள கதைக்கும்,நம்ம இதுவரை படித்த இந்த வலை பதிவில் உள்ள பதிவுகளுக்கும்  எதாவது சம்பந்தம் இருக்கா? ச்சே.. ச்சே.. அதை எல்லாம் சம்பந்த படுத்தி யோசிக்க கூடாது. நம்ம தேடுவோம்...     


Monday, November 21, 2011

ஏன் கதைகள்?


சில நாட்களுக்கு முன்பு எனது நண்பரின் வலை  பதிவில் ஒருவர் மறுமொழி இட்டிருந்தார் கற்பனை கதைகளால் தான் ஒரு மதமே உருவானது தங்கள் மதத்தில் கற்பனை கதைகளுக்கே இடமில்லை என்று எதையுமே ஆராயாமல் தனது கற்பனையை மறுமொழியாய்(கதையாய்) எழுதி இருந்தார். அவருக்கு என் நன்றிகள். 

இப்பொழுது தனியாக ஜென் கதைகள் என்ற தலைப்பில் இதை இடுவதற்கு காரணம் நீண்ட தேடலுக்கு பிறகு தோன்றியது.  ( நாங்களும் யோசிப்போம்ள) 

ஏன் கதைகள்?

ஒரு வயதான மனிதர் மிக உயர்ந்த மலை உச்சியில் தனியே வாழ்ந்து வந்தார்.தினமும் காலை வேளையில் அந்த மலையின் உச்சியில் உயரமான செங்குத்தான பாறையின் மீது அமர்ந்து சுற்றியுள்ள மலைகளையும் காடுகளையும் கண்டு ரசிப்பது அவர் வழக்கம் . ஒருநாள் அதே போல  அந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய முற்படுகையில் அந்த கடினமான உயரிய பாறையின் அடிவாரத்தில் எதோ ஒன்று மின்னுவதை கண்டார். வயதானவராய்   இருந்த போதும் அவருடைய கண்களுக்கு அது என்ன என்பதை கணிக்க முடிந்தது. அது ஒரு பெரிய தங்கத்தினால் ஓரங்கள் இளைக்க பட்ட கரிய பேழை. அந்த பாறையின் மீது அமர்ந்து கொண்டே அந்த பேழை எப்படி அங்கு வந்தது?, அதில் என்ன இருக்கும்? என்று யோசிக்க தொடங்கினார்...

நல்ல கதைகளை போல் வேறு எதுவும் நம் கவனத்தை ஈர்க்காது. தொலைக்காட்சி, திரைப்படம் ,வானொலி, புத்தகங்கள் போன்ற எதுவும் இல்லா காலத்தில். முக்கியமாக கதைகள் அவர்களுக்கு கற்பிக்கவும் கேளிக்கைக்கும் உதவியது. இன்று பெரிய நிறுவனங்களில் நிர்வாகிகள் உணவு அருந்துவது போல் குகையில் வாழ்ந்த மனிதர்களுக்கு கதைகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. கதைகள் நம் குருதியுடன் கலந்த ஒன்று. நமக்கு கதாபாத்திரம், நடந்த சூழல்,கதையின் உச்சகட்டம்(கிளைமாக்ஸ்), கதையின் கரு, கதையில் வரும் சிலிரிப்பு (த்ரில்)  கதையில் அவர்கள் அடைந்த துன்பங்கள் வெற்றிகளை ஆழமாக அடுத்தவரை ஈர்க்கும் படி மிகைப்படுத்தி கூறுவதில் நமக்கு அலாதி பிரியம்.எல்லா இலக்கியங்கள் மற்றும் ஊடகங்களின் அடிப்படை நல்ல கதை சொல்வதின் விரிவாக்கமே. கதை சொல்வதின் முக்கியத்துவம் நீங்கள் மற்றவர் முன்னிலையில் சொல்லும்   போது அவர்களை நேரடியாக பார்க்கவும்,  கருத்துகளை கேட்கவும் , அவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவும்  முடியும். கதை சொல்ல அதை கேட்க மற்றவர் தேவை. தனியாக கதை சொல்லிக்கொள்ளவது அல்ல அன்றி நீங்கள் மனநோயாளியாக இல்லா பட்சத்தில்... (அது தனி கதை) .

இங்கே நான் ஜென் கதைகள் எடுத்ததற்கு காரணம்? மனித வரலாற்றில் காலங்கள் கடந்து நிற்கும் அவை மனிதனின் உள்நிலை (insight), ஆன்மிகம்,பிரபஞ்சம் ஆகியவற்றை நமக்கு ஜென் மற்றும் தாவோ(TAO ) கதைகள், உணர்த்தலாம்?!(May  be ). அல்லது பொழுது போக்கிற்கு. சந்தேகம் இன்றி அந்த கதைகள் நமக்கு வாழ்க்கை மற்றும் இறப்பை பற்றிய உண்மைகளை உணர்த்தும்.ஜென் துறவிகள் மலை உச்சியில் தங்கள் மடத்திற்கு மட்டும் என்று இரகசியமாக இல்லாமல் அனைவருக்கும் பயன்படும் படி கூறி சென்றவைகள். நாமும் நம் தேடலில் பயன்படுமா பார்ப்போமே .

ஒவ்வொரு கதையிலும் உங்கள் பார்வை உங்கள் கருத்துகள், நீங்கள் உணர்ந்த அல்லது புரிந்த கொண்டவை மற்றவர்களிடம் இருந்து மாறுபடலாம் அது நம் தேடலில் மறுமொழியாக பதிவு செய்தால் அனைவருக்கும் பயன்படும். நன்றிகளுடன்.

யாருடா இவன் கடவுள்ன்னு ஆரம்பிச்சான், எதுக்குன்னு கேட்டான், நம்ம யாருன்னு கேட்டான் இப்போ கதை சொல்ல போய்ட்டான்னு யோசிக்கறீங்களா? அது விளம்பர இடைவேளை மாதிரி. நம்ம நோக்கம், குறிக்கோள் கடவுளை கண்டுபிடிக்கறது அதில் இருந்து பின் வாங்கறதா இல்லை. எங்க போனாலும் திரும்ப நம்ம தலைப்புக்கு வந்திடுவோம்ல. போன பதிவு கடைசியல் ஏதோ கேட்டேன் நான் என்றால் ஆத்மாவா? இல்ல உயிரா? நான் (நாம்) யார்?  யாராவது எதாவது பதில் சொல்லுவாங்களான்னு காத்து இருக்கேன். அது வரை எதாவது சொல்லணும் இல்ல அதுக்கு தான் ஒரு கதை சொன்னேன்.கொஞ்சம் காத்து இருந்து தான் பார்ப்போமே..    
         
                        


  

Sunday, November 20, 2011

யார் அது?!


கடவுள் தேடலில் நம்ம யார்?, நம்ம கிட்ட என்ன இருக்கு? , நாம எதை வைத்து கடவுளை கண்டுபிடிக்கபோறோம். அந்த தெளிவு இல்லாம எப்படி கடவுளை கண்டு பிடிக்கறது? ஏற்கனவே இருக்கற புலன்கள் மூலமா கடவுளை (இருந்தால் ?!)கண்டுபிடிக்க முடியாதுன்னு ஆய்டுச்சு (பதிவு - என்னை தேடி - கடவுள்!). இப்போ நாம யாருன்னு பார்த்துட்டு அப்பறம் ஒவ்வொன்னா( தகுதி இருக்கா, பாஸ்போர்ட் இருக்கா, விசா இருக்கா, இல்லாட்டி அது எல்லாம் இல்லாம  வேற எதாவது வழி இருக்கா பாப்போம் ) மொதல்ல நம்ம யாரு கொஞ்சம் தேடித்தான் பார்ப்போமே.

நாம (நான்)  யார்? - மனி...தன் (ரஜினி ஸ்டைல பதில் வருது) (நாய்க்கு தெரியுமா  நாயோட பேரு நாய்ன்னு?? ஆகா என்ன ஒரு சிந்தனை?).நம்மலா சொல்லிக்கறோம் மனிதன்னு அனால் அது நாம(நான்) இல்ல(ஹிஹி கோபம் வேண்டாம் ) நம்ம ஜனங்க எல்லாருக்கும் நாம பயன்படுத்தும் (மனிதன்/மனிதர்கள் ) பொது பெயர். நம்மலா வச்சுகிட்டது. உண்மையில் அது நான்/நாம் இல்லை . ஒரு பெயர் அவ்வளவே.இப்படி எல்லாம் இருந்தால் அவன் மனிதன் (collective qualities ) சேர்த்த ஒரு வார்த்தை அவ்வளவே.அது நான் இல்லை .

அப்ப நான் (நாம்) யார் ?
(என்னுடைய  பெயர் ) நான் பிரபு..(நாய்க்கு பெயர் முத்துமாலை) நீங்க? (ஏதோ ஒரு பெயர் சொல்வீங்க)- அது தான் நாமலா? அதுவும் பெயரே அடையாளத்துக்கு கூப்பிட. அந்த பெயர் தான் நாமா? இல்ல பின்ன நாம யார்?அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
என்னுடைய தொழில் (நாய்க்கு வேலை இல்ல உட்கார நேரம் இல்ல)நான் கணினி வல்லுனன் ,டாக்டர், வக்கீல், சிப்பாய், மந்திரி, வாத்தியார்  என்ன வேணாலும் சொல்லிக்குங்க அது எல்லாம் நாமா? அது எல்லாம் நாம் செய்யும் தொழில்.அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
நான் இந்தியன், நான் மலேசியன், நான் இந்த நாட்டை சேர்ந்தவன்.. அதுவும் என்னுடைய நாட்டை சார்ந்த பெயர்.அது நான் இல்லை .

நான் (நாம்) யார்?
நான் ஹிந்து, புத்திஸ்ட்,  சீக்கியன் , ஜைனமதம், வேற என்ன மதம் வேணாலும் சொல்லிக்  கொள்ளுங்கள்  அது என்னுடைய மதம் சார்ந்த பெயர். அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
நான் இன்னார் மகன்/மகள்  , இன்னார் தந்தை/தாய் , இன்னார் பேரன்/பேத்தி, இன்னார் இன்னார் எல்லாம் என்னுடைய உறவுகள் சார்ந்த பெயர்.அது நான் இல்லை .

நான்(நாம்) யார்?
என்ன என்னவோ சொல்லி பார்த்தாச்சு எல்லாம் என்னை சார்ந்து தான் வருது அப்ப நான்(நாம்) யார்?

(ஏன்? ஏன்? ஏன் இப்படி படுத்தற? நேரா விசயத்துக்கு வா - mind வாய்ஸ் கேட்குது)  கொஞ்சம் பொறுத்துக்குங்க வேற வழி இல்ல.


நான்(நாம்) யார்?
ஆங்...! கண்டு புடிச்சிட்டேன் - இந்த உடல் தான் நான் (எப்புடி?).இல்ல அங்கேயும் இடிக்குதே..சொல்லும் போது என் உடல், பொருள், ஆவி(இட்லி வேகவைக்கறதா?)  இது என் உடல் அப்படி தானே சொல்ல வருது.என் கண், என் கை, என் கால், என் உடம்பு. அப்ப அதுவும் நான் இல்ல. என்னை சார்ந்த பொருள் எல்லாம் எப்படி நான் ஆகா முடியும்?
எங்கயோ ஒரு அசிரிரி கேட்குதே   (சார்/மேடம் நீங்களா சொன்னது?) ...மடையா நாமா தான் ஆத்மா,உயிர். அதுவா அதற்க்கு விடை அல்லது முடிவு ?! கண்டிப்பாக?! நிச்சயமாக?! உறுதியாக?! நான் அப்படின்னு சொல்றது நம்ம ஆத்மாவை தான். அப்படியா?  முடிவிற்கு வந்திரலாமா? கண்டிப்பா காட்டுங்க அப்ப தான் உறுதி எல்லாம் சொல்ல மாட்டேன். அது தான் ஏற்கனவே நாட்டமை தீர்ப்பு இருக்கே. ஆகையால் தைரியம்மா சொல்லுங்க ஆத்மா தான் நாமா?  ஏன் தயக்கம்... ? சொல்லுங்க...நான் காத்திருக்கேன் தேடலுடன்...


'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே! ' 


இந்த வரிகளும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு இல்ல? ச்சே.. ச்சே.. அதை எல்லாம் நாம பார்க்கபடாது. நம்ம யாரு?!  தேடுவோம் விடறதா இல்ல...
        

எதற்காக கடவுள்?


நம்ம (நான்)இப்போ எதுக்கு கடவுளை தேடிக்கொண்டு இருக்கிறோம்? எதுக்கு தேடறோம்? கடவுள் இருக்காரா இல்லையான்னு கூட தெரியாமல்?
நிறைய பேர் சொல்லறாங்க கடவுள் இருக்கார்ன்னு நம்மளும் தேடித்தான் பார்ப்போமே. ஒருவேளை உண்மையாய்  இருந்தால் கேட்டது எல்லாம் கிடைக்கும் இல்லையா? இல்லாட்டி சில மதங்கள் சொல்வது போல் செத்ததுக்கு அப்பறம் சொர்க்கம். ஏதோ ஒரு பயன் இருக்கு உயிருடன் இருக்கும் போது   இல்லாட்டி செத்ததுக்கு அப்பறம். தேடித்தான் பார்ப்போமே. ஒருவேளை கடவுள் இல்லாமல் போனால் ஒண்ணும் இழப்பு இல்லை. அதுக்காகவா தேடுகிறோம்?.

சின்ன வயதில் இருந்தே கடவுள் இருக்கு நாம வணங்கனும் அப்படின்னு சொல்லி வளத்துட்டாங்க  அதுவே பழக்கமா போச்சு - அப்படியா?
வாழும் போது.....  
வாழ்கையில் கஷ்டமா? - கடவுளை கும்பிட்டா கஷ்டம் தீரும்.
வாழ்கையில் தேவைகள்? - கடவுளை வணங்கினால் கேட்டது கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்? - டாக்டர் கடவுள்.  
வாழ்கையில் நிம்மதி இல்லையா? - கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு 
வாழ்க்கை பயம்மா இருக்கா ?- சாமி பேர சொன்னால் கொஞ்சம் தைரியம்மா இருக்கு. 

இதை தாண்டி நமக்கு கடவுள் தேவை எதாவது இருக்கா?  அது வேணும் இது வேணும் காப்பாத்தனும் அவ்வளவு தான் அது கிடைச்சா போதும். இல்லாட்டி குறைஞ்ச பட்சம் கஷ்டமாவது வராமல் இருந்தால் போதும் . அதுக்காக வாழ்க்கை எல்லாம் ஏதோ நம்பிக்கையில் வணங்கிகிட்டு , தேடிக்கிட்டு இருக்கோம்.

இல்லை செத்த பின்னால..நரகத்துக்கு போகக்கூடாது  சொர்கத்துக்கு போகணும். வாழ்கையில் எல்லா கஷ்டமும் பட்டாச்சு செத்ததுக்கு அப்பறம் சந்தோசம இருக்கலாம். அதுக்காகவா கடவுள் ?இதுக்காகவா கடவுள்? ஒரே கொழப்பமா இருக்கே..? இல்லை

வேற என்னோவோ உருத்திக்கிட்டு இருக்கு என்ன அது ???

வாழும் போது 
கேட்டது எல்லாம் கிடைத்தால்
நினைத்தது எல்லாம் நடந்தால்  - சந்தோசம்மா....... இருக்கு . ஒரே ஜாலி தான்.  (சந்தோசம்மா இருந்தால் கடவுளை மறந்துவிடுகிறோம். (அது வேற விஷயம்). கஷ்டம் வந்தால் இல்ல வர்றமாதிரி தெரிந்தால் கடவுளை தேடறோம். இதுக்கு முடிவு தான் என்ன ?

சந்தோஷம் வரும் போது அப்படியே பிடிச்சு வச்சுகிட்டா கடவுளை தேடவேண்டியது இல்லை... அவர் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? சரியா? அப்பவும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு சந்தோஷம் போய்ட்டா? கடவுள் நாம அவரை கண்டுகலன்னு தண்டிசுட்டா? 

சரி மொதல்ல சந்தோஷத்த பிடிக்க முடியுதான்னு பாப்போம். முடியாட்டி அப்பறம் திரும்ப கடவுளை தேடுவோம்.

எப்போ எல்லாம் நமக்கு  சந்தோசம் வரும்?(பிடிச்சுவைக்கதான்

நல்லா சகல வசதிகளோட ஒரு வீடு கிடைச்சா? - அருமை அற்புதம்.. (சந்தோசம் தான் )
அப்பறம் கோடி கணக்க பணம் (சிபிஐ கேஸ் இல்லாம ;-)) எந்த பிரச்சனையும் இல்லாம நினைச்ச படி செலவு செய்ய - பெருமூச்சு விடவேண்டாம் கிடைச்சா சந்தோசம் தானே? அதுக்காக தானே பணத்து பின்னாடி ஓடிகிட்டு இருக்கோம் .
நினைச்ச மாதிரி படிப்பு, வேலை,  பதவி, தொழில் இத்யாதி இத்யாதி எல்லாம்...   
முக்கியமா நம்ம கனவுகண்ட மாதிரி காதலன்/காதலி,  கணவன்/மனைவி, குழந்தைகள்,உறவுகள் . - இன்னும் என்ன? ( அட ஏம்ப்பா வெறுப்பு ஏத்தர - Mind  வாய்ஸ் கேட்குது). கொஞ்சம் யோசிச்சுதான் பார்ப்போமே எங்கயாவது சந்தோசத்தை  புடிக்க முடியுதான்னு. புடிக்க முடிந்தால் அப்பறம் அதை அடைய முயற்சி செய்வோம். அப்ப தொனைக்குவேணும்ன்னா கடவுளை கூப்பிட்டுபோம். சரியா ?

நான் என்னையும் மற்றவர்களையும் பார்த்த வரை அது எல்லாம் கிடைச்சாலும் இன்னும் தேடல் நிற்கவில்லை. 
நல்ல வசதியான வீடு இருக்கறவங்க இன்னும் பெரிய வசதியான வீடு தேடறாங்க 
பணம் இருந்தால் இன்னும் நிறைய  பணத்த தேடறாங்க 
பதவில இருக்கறவங்க இன்னும் இன்னும் உயர் பதவி இப்படியே எல்லாத்துலயும் போய்கிட்டே இருக்கு அப்ப என்னதான் முடிவு இதுக்கு எல்லை தான் என்ன ? நினைச்சது எல்லாம் கிடைத்தாலும்  சந்தோஷம் கொஞ்சம் நாட்கள் இல்லாட்டி கொஞ்ச நேரம் தானா??? நினைச்சது கிடைச்சாலும் கொஞ்சம் நேரம் தானா நம்ம சந்தோசம்?  அப்பறம் திரும்ப அடுத்தது( Success is not a Destination its a Journey-  தத்துவம் ஹிஹி but what for success? ).  இப்படியே நாம என்னத்த தேடிகிட்டு இருக்கோம் கடவுளா? இல்ல சந்தோசாமா? (தேடற கடவுள் கிடைத்தால் எப்போவும் சந்தோசாமா ? அப்ப நமக்கு சந்தோசமா இருக்கனும் அதுக்கு கடவுள் தேவை இருக்கு மற்றபடி வேற எதுக்கும் நமக்கு கடவுள் தேவை இல்லை. சரியா ? 

இல்ல இது எல்லாம் தெரிந்தாலும் எனக்குள் இன்னும் வேறு ஏதோ ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கு. என்ன அது ? உங்களுக்கும் அது போல ஏதேனும் நெருடல் உள்ளதா? 

இப்பிறவியில் நாம் வாழும் காலம் 100 வயது (வாழ்ந்தால்) வரை எனில் எத்தனை நாட்கள் நாம் வாழ்கிறோம்? 100 X 365  = 36 ,500  நாட்கள் மட்டுமே. அதில் நம் வயது இப்பொழுது- கடந்த நாட்கள்? மீதம் ....??? (அதிகம் இல்ல gentleman /gentlewoman )   
கொஞ்சம் பயமாவும் கஷ்டமாவும் தான் இருக்கு.

அந்த ஒரு நாள் 24 மணிநேரம் நாம எப்படி கடத்தறோம்?சராசரிய 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் உறக்கம் மீதம் 8  மணிநேரம் எப்படி போகுதுனே தெரியல. 8 + 8 + 8 = 24 சரியா ?   
  
அப்படி இருக்க இந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒரு நிமிடம் கொஞ்சம் ஆழ்ந்து பார்போம். எல்லா நேரமும் வேற எதையோ தேடிகிட்டு இருக்கோம் காசு, படிப்பு , பதவி ,வசதிகள் , வாய்ப்புக்கள் இன்னும் பல இது எல்லாம் கிடைக்க நமக்கு ஒருவன் தேவை அவன் கடவுள் அவனையும் சேர்த்து தேடிக்கொண்டு இருக்கிறோம்.  எல்லாம் நமக்காக தேடிக்கொண்டு இருக்கிறோம்.நா(ன்)ம் யார் ? தேடிய தருணங்கள் எத்தனை?

என்னடா இது அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா நம்ம கிட்ட வந்து நிக்கறான்னு யோசிக்கறீங்களா? அப்ப முடிவு செஞ்சாச்சா? நா(ன்)ம் தான் கடவுள்ன்னு சொல்லவரான்னு? கண்டிப்பா இல்ல. நம்ம பார்க்கற எல்லாம் கடவுள் படைப்பு கடவுள் செயல் கடவுள் மிக பெரியவன் அப்படின்னா நாம எப்படி அவனை தேடறது இல்ல பார்க்கறது? அதுக்காக தான் கேட்டேன்  நா(ன்)ம் யார் ?ன்னு. சின்ன பூச்சி  மாதிரி இருந்துகிட்டு பெரிய யானைய எப்படி முழுசா பார்க்கறது(தேடறது)? பார்க்காம கண்டுபிடிக்காம விடபோறது இல்ல. 

முதல் உண்மை - நாம பிறந்த உடனே நிச்சயக்க பட்ட உண்மை. நமது இறப்பு கண்டிப்பாக. நம்ம எல்லாம் ஒருநாள் செத்து போயிடுவோம். இது உறுதி.. அதே போல் இன்னும் ஒரு உண்மையை தேடி... ... 

'நந்த வனத்தினில் ஓராண்டி - அவன் 
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி 
கொண்டுவந்தான் ஒரு தோண்டி - அதை 
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி!! ' 

இந்த பாடல் 4 வரில  ஏதோ சொல்ல வருது இல்ல? ச்சே.. ச்சே.. நாம யாரு? ... நாம தேடலை தொடர்வோம் ..       

Thursday, November 17, 2011

கடவுள்!


கடவுள்! 
இறைவன்!
ஆண்டவன் 
பரம்பொருள்! 
இன்னும் எத்தனையோ பெயர்கள். யாரவது பார்த்ததுண்டா ? கேட்டால் பதில் 
"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" 
அது யாருன்னு தான் பார்த்துவிடுவோமே அப்படின்னு ஒரு முடிவோடா தான் இந்த துவக்கம். 


மொதல்ல கடவுள் இருக்கா இல்லையா? எப்படி இருப்பான்? எங்க இருப்பான்? என்ன குடுப்பான்?  இன்னும் கேள்விகள் நீண்டுகொண்டே போகும் தெளிந்த ஒரு பதிலும்  இல்லாமல். மற்றவை எல்லாம் பிறகு பார்போம் இருந்தால் தானே மற்றதை பற்றி பேச.

ஆகையால் முதலில் கடவுள் இருக்கா இல்லையா? (ஐ... ஆசைய பாரு அதுக்குள்ள பதில் வேணும்மா?) பதில் சொன்னால் முதல் முடிவு நான் நாத்திகனா இல்ல ஆத்திகனா? அப்பறம் நான் என்ன மதம் இப்படியே என்னை பத்தி தேடல் இருக்கும் . இந்த பதிவில் நம்ம தேட போறது என்னை பற்றி இல்லை.       
கடவுள் !
அந்த தெளிவு, அதன் தேடல் எதுவும் இல்லாமல் ஏதோ நம்பிக்கைள்,  நம் முன்னோர்கள் வழி. இல்லை சமூகத்தின் வழி அல்லது மதத்தின் வழி .ஏதோ ஒண்ணு .
சரி தேடலாம் என்றால் இந்த அவசர உலகத்தில் எப்படி சாத்தியம்?.சரி யாரவது இதற்க்கு விடை சொல்வார்களா? இல்லை கண்ணில் காட்டுவார்களா?அப்படியே காட்டினாலும் சொன்னாலும் என்ன உறுதி? எது உண்மை? எத்தனை எத்தனை  குழப்பங்கள்.
 சரி புனித நூல்கள், வேதம் மற்றவை  அதை படிச்சாவது தெரிஞ்சிக்கலாம்ன்னு பார்த்த அதுக்கும் நேரம் வேணும். அப்படியே படிச்சா முழுசா, நேரா (இது தான், இப்படி தான் ) புரியுதானா  அதவும் சிக்கல். இருந்தும் விடவும் மனம் இல்லாமல் முழுதாய் நம்பவும் முடியாமல் என்ன பொ(ற)ழப்புடா   இது?! 
இதில் வேற இருக்கறது பத்தாதுன்னு இதுக்கு இன்னொரு பதிவு.நல்லா ............     விளங்கும்!!!!!!!!!.( உங்க mind வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டேன்!)
கொஞ்சம் காத்திருங்கள் இன்னும் சில வரி மொக்கையை  முடிச்சிட்டு ஆரம்பிப்போம்ல . 
திறந்த மனதுடன் தொடருங்கள் எந்த வரிகளையும் அப்படியே நம்பவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வரிகளையும் உங்கள் சுய பரிசோதனையுடன் தொடருங்கள். உங்கள் விமர்சனங்கள் மறுமொழிகள் மாற்றுகருத்துக்கள் அனைத்தும் இந்த பதிவை செம்மையாக்க உதவும். உங்கள் வருகைக்கு என் முதல் நன்றி. 
கடவுள் இருக்கார் இல்லாட்டி இல்லை(தத்துவம் ஹிஹி ). எதை வைத்து முடிவு செய்வது? எது அளவுகோல்?  எப்படி தெரிஞ்சுகறது? நமக்கு தெரிஞ்சுது எல்லாம் கண்ணால பார்க்கறது முடிவுக்கு வரமுடியலையா தொட்டு பார்க்கறது அப்பவும் தெரியலய நுகர்ந்து(மோந்து) பார்க்கறது அப்பவும் தெரியலையா அடுத்து என்ன நாக்கு தான் அதுவும் தெரியல தெரிஞ்சவங்க கிட்ட கேட்கலாம் (நமக்கு ஒத்துகர மாதிரி பதில் இருந்தால் சரி ) இல்லாட்டி என்ன பண்ணலாம் நம்மலே ஒரு முடிவுக்கு வந்துரலாம் நம்ம கற்பனைக்கு ஏத்தாப்ல. சரியா?. நம்ம யாரு தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்க மாட்டோம்ல.[ தெரியாததை தெரியாதுன்னு ஒத்துகிட்டு உண்மை  தேடல் இருந்தால் தெரிந்து கொள்ளும் தூரம் தொலைவில் இல்லை (நாங்களும் அப்பபோ கருத்து சொல்வோம்ல )].
கடவுள்!- உண்மை - இருக்கார்-ன்னு  வச்சுப்போம் (சும்மான்காச்சியும் முடிவு அல்ல). நாம எதை வைத்து ஒத்துக்கறது?. எப்படி நாம இது கடவுள் தான் அப்படின்னு முடிவு பண்றது ? நம்ம கிட்ட இருக்கற எல்லாம் உண்மையை உணர்த்தற புலன்களா? அவை உண்மையை தான் உணர்த்துதா? அதையும் தான் பார்த்திருவோமே. உண்மை என்றால் ஒன்றாக தான் இருக்க முடியும். 
கண் - சிலருக்கு கடவுள்லா தெரியற சிலை சிலருக்கு கல்லா தெரியுது சிலருக்கு வேற மாதிரி தெரியுது.உடனே மனசு தான் காரணம்ன்னு  சொல்லாதீங்க கண்ணை  பத்தி மட்டும் பேசுவோம்.இல்லை மனசு தான் காரணம்ன்னா இதுக்கு பதில் சொல்லுங்க.நமக்கு சூரியன் வந்தால் பகல், வெளிச்சம். சில ஜீவ ராசிகளுக்கு சூரியன் மறைந்தால் பகல். அப்ப எது உண்மை ? எது உண்மையான பகல்?(அதுக்கு அது தான், நமக்கு இது தான்னு பல்பு குடுக்காதீங்க உண்மை ஒன்றாக  தான் இருக்க முடியும்  .....ஸ்..ப்பா இப்பவே கண்ண கட்டுதே). ஆகையால் கண்ணால் காண்பது எல்லாம் உண்மை இல்லை. (கண்ணோட - முடிவு. நாட்டாமையை கேட்போம் -  செல்லாது செல்லாது.அப்பறம் என்ன? ... அடுத்ததை பார்ப்போம். Mind  வாய்ஸ் கேட்குது. ஆனால்  தீர்ப்பு எல்லாம் மாத்த முடியாது).
தொடு உணர்வு - தினம் நாம் தட்டும் இந்த பொட்டி அதுதாங்க கணினி விசை பலகை (Keyboard ) ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சீதோஷணத்தில் இருக்கு(அதே அறை அதே வெப்பநிலை) ஆனால் எப்படி தொடும் போது ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கு?(என்ன அதிசயம்? ஹிஹி ). உங்களுக்கு அது மாதிரி அனுபவம் உண்டா? (அதை எல்லாம் யாரு பார்த்தா? நீ சொல்லவந்ததை சொல்லு - mind வாய்ஸ் கேட்குது ). நம்ம தொடும் பொருளை விட  நம் உடல் வெப்பம் குளுர்ச்சியாக இருந்தால் அந்த பொருள் சூடாக உணர்கிறோம் அதற்கு எதிர் மாறாக இருந்தால் குளிச்சியாக உணர்கிறோம். அப்ப எது உண்மையானது ? நாம் தொடும் பொருளின் உண்மையான வெப்ப நிலை என்ன சூடா இல்லை குளிரிச்சியானதா?(இந்த தெர்மாமீட்டர், அந்த மீட்டர், இந்த மீட்டர் ... வச்சு... அழந்து .... உண்மையை.. எதால பார்பீங்க?  நாட்டாமே??? - செல்லாது செல்லாது)). இந்த பதிவை தொட்டேன்-கெட்டேன் - கேட்குது கேட்குது.   
இதை மாதிரி புலன்களை வைத்து கொண்டு நாம் கடவுள் -உண்மையை தேடிக்கொண்டு இருக்கிறோம் அடுத்து என்ன பார்ப்போமே.
முகர்தல் - எது நல்ல மணம்? ரொம்ப சொல்ல வேண்டியது இல்லை உங்களுக்கே தெரியும். ஒவ்வொருத்தருக்கு ஒண்ணு ஒண்ணு நல்ல மணம் -கருவாடு விற்பவர்களுக்கு  கருவாடு, பூ விற்பவர்களுக்கு பூ வாசம். அப்ப எது நல்ல மணம் ? உண்மை ஒன்று தான்.  (நாட்டாமே ?? - செல்லாது செல்லாது ).  
நா - சுவை - எது நல்ல உணவு /சுவை? இதுக்கும் நிறைய சொல்ல வேண்டியது இல்லை. சைவம், அசைவம் (இதுக்கு ஒரு பதிவே எழுதலாம் ஆனால் இப்போ இல்ல). வெவ்வேறு ஊர் , வெவ்வேறு நாட்டு உணவுகள். குறைந்த பட்சம் எல்லாருக்கும் பிடித்த மாதிரி ஒரு உணவு? உடலுக்கு ஆரோக்கியமான  உணவு? வாய்ப்பே இல்ல. சரி இது அவுங்க அவுங்க நாட்டு பழக்கம் உணவு முறை அதனால அப்படியான்னு பார்த்தா அதுவும் இல்ல. நாம அங்க போனால் burger , pizza  இப்படியா நாக்குக்கு பிடிக்கிது. (நாட்டாமே?? --சாப்பிட்டு வந்து தீர்ப்பு சொல்றேனே- செல்லாது செல்லாது ).
இளையராஜாவின் சிம்போனி இசையில் கேட்ட - திருவாசகம் வரிகள் மண்டைகுள்ள குடையுது..                             
                                      "மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய..... "
நான் சொன்னதை தான் ஒரு வரியில்  சொல்லிருக்காரோ மாணிக்க வாசகர்? ச்சே.. ச்சே.. நம்ம யாரு அது எப்படி ஒத்துக்கறது? நம்ம தேடுவோம் தொடர்ந்து.. கடவுளே நேரா வந்தாலும் ஒத்துக்க மாட்டோம்ல. அடையாள அட்டை காட்டினாலும் அடுத்த ஆதாரம் தானே கேட்போம், முழுசா மனம் ஒத்துகாதுல அதனால நமக்கு உண்மைன்னு உணர வரைக்கும் விடறதா இல்லை. 
இந்த புலன்கள் அப்ப நமக்கு என்ன தான் சொல்லுது? அது சொல்றது எல்லாம் உண்மை இல்ல அப்பறம் அது எதுக்காக? அதை வச்சு நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்?அதை பத்தி எல்லாம் அப்பறம் பார்ப்போம் இப்போ தலைப்பே குறியா தேடுவோம் உண்மை ஒன்றே - கடவுள் இருக்கா இல்லையா?  
நம் ஐம்புலன்கள் ஒப்பிட்டு பார்த்து உணர்த்த மட்டுமே உதவுகிறது அப்படி இருக்க கடவுள் என்று ஒன்று உண்மையாக இருந்தால் இந்த ஐம்புலன்கள் கடவுளை யாருடன் அல்லது எதனுடன் ஒப்பிட்டு நமக்கு உணர்த்தும்?.... அதுதாங்க நாம எப்படி தெரிஞ்சிக்கறது இந்த புலன்கள் மூலமா? ஆமா நாம எதுக்காக இப்போ கடவுளை தேடிகிட்டு இருக்கோம்? அதையும் தான் அடுத்த பதிவில் பார்த்திருவோமே அதுல எங்கேயாவது  கடவுள் இருக்காரா இல்லையான்னு நிரூபிக்க பாயிண்ட் கிடைக்குதான்னு பார்ப்போம்..  
அதுவரை... உங்கள் சிந்தனைக்கு ஓஷோவின்  வரிகள் ஆங்கிலத்தில்... 
Strange Consequences
"When Friedrich Nietzsche declared “God is dead”, fuck became the most important word in English language". 
The problem is if god is dead, then you lose the most important word in your language and you will need a substitute. And god was one end, one extreme. And when one extreme is disappear from your mental vision, the necessary and inevitable is you will fall to the other extreme. And that’s what has happened Milaripa … Instead of god, fuck has become the most important word in our language. Even if Friedrich Nietzsche comes back, he will be surprised, and he will try to resists, somehow the dead god is back because this is stupid. But you will need a whole report on it, a whole research.

One of the most interesting words in the English language today is the word 'fuck'. It is one magical word. Just by its sound it can describe pain, pleasure, hate and love. In language, it falls into many grammatical categories. It can be used as a verb, both transitive (John fucked Mary) and intransitive (Mary was fucked by John), and as a noun (Mary is a fine fuck). It can be used as an objective (Mary is fucking beautiful).

As you can see there are not many words with the versatility of 'fuck'. Besides the sexual meaning, there are also the following uses:

Ignorance: Fucked if I know.
Trouble: I guess I am fucked now!
Fraud: I got fucked at the used car lot.
Aggression: Fuck you!
Displeasure: What the fuck is going on here?
Difficulty: I can't understand this fucking job.
Incompetence: He is a fuck off.
Suspicion: What the fuck are you doing?
Enjoyment: I had a fucking good time.
Request: Get the fuck out of here.
Hostility: I am going to knock your fucking head off!
Greeting: How the fuck are you?
Apathy: Who gives a fuck?
Innovation: Get a bigger fucking hammer.
Surprise: Fuck! You scared the shit out of me.
Anxiety: Today is really fucked. And it is very healthy too.

If every morning you do it as a transcendental meditation - just when you get up, the first thing, repeat the mantra "fuck you!" five times, it clears the throat too.