அணுவின் கூறுகள்
ஒவ்வொரு அணுவினுள்ளும் மூன்று வகையான அணுக்கூறுகள் உள்ளன. அவையாவன:
- நேர்மின்னி அல்லது புரோட்டான்
- எதிர்மின்னி அல்லது எலக்டிரான்
- நொதுமின்னி அல்லது நியூட்ரான்
இவற்றில் நேர்மின்னியும் நொதுமின்னியும் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கும். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் (உண்மையில் இந்த மாதிரி முழுக்க உண்மை இல்லையாயினும் இதுவே பொதுவாக பயன்படுத்தப்படும் எளிமைப்படுத்தப்பட்ட மாதிரியாகும். மிகச்சரியான ஓர் மாதிரி குவாண்டம் பொறிமுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.).
இதில் எலக்ட்ரானும், ப்ரோட்டானுமே சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம அளவில் இருப்பதால் இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது. நன்றி:- விக்கிபீடியா.
என்னடா அடுத்தபதிவில் ஏதோ சொல்லபோரான்னு பார்த்தா அணு கூறை பத்தி எழுதிகிட்டு இருக்கானேன்னு யோசனையா?
ஆதியில் இருந்து பதிவில் அந்த கதை எனக்கு சொன்னது என் பாட்டியும் என் பெற்றோர் என்று சொன்னேன். நினைவிருக்கிறதா? அதற்கான பதில் இந்த பதிவில் கிடைக்கும்.
மேலே நான் கூறிய அணுவின் கூறு படித்தால் எப்படி இருக்கு ? புரியுதா? அறிவியலில் பல பிரிவுகள் இருந்தாலும் அந்த குவாண்டம் பொறிமுறையில் படித்தவர்களுக்கு தான் இதை பற்றி எல்லாம் முழுதாய் தெரியுமாம்?!
என் பாட்டி முன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.அவர் இப்பொழுது உயிருடன் இல்லை அவர் இறக்கும் பொழுது அவர் வயது சுமாராக 118 (12 வருடங்களுக்கு முன் )இருக்கும். எதற்காக அவர் வயது இப்பொழுது? சும்மா அவர் படித்தது எப்பொழுது என்று உங்கள் யூகத்துக்கு தான்.
இன்று நாம் படித்த படிக்கும் அறிவியல் எல்லாம் என்றோ நமக்கு கதைகளாய் சொல்லிச் சென்றிருகிறார்கள் நம் முன்னோர். மிக எளிமையாக ஒரு முறை கேட்டாலே நினைவில் கொள்ளும் அளவில். எவ்வளவு அனுபவம் இருந்தால் அறிவியலை கதையாய் சொல்ல முடியும்? அதுவும் பிழை இன்றி. அந்த கதையில் என்ன அறிவியல் இருக்க போகிறது? அவர்கள் சொல்லிச் சென்ற அறிவியலின் ஆழம் அளவிட முடியாதது.என்னால் விளக்க முடிந்த அளவிற்கு எடுத்து சொல்கிறேன்.
புரோட்டான், நியூட்ரான்,எலக்டிரான், - என்ன இவை தான் பிரம்மா, விஷ்ணு, சிவன்னு சொல்லபோரேன்னு பாக்கறீங்களா? சிவனை தவிர மத்த இரண்டுபேரும் இதில் இருக்காங்க அப்பறம் இன்னொருவர் யார் ? யோசிங்க.கடைசியா பார்போம்.
அது வரை கதை படியே மத்த இரண்டுபேரை பத்தி பார்ப்போம்.
அணுவின் உள்ளே -
புரோட்டான் (positively charged )- விஷ்ணு -
நியூட்ரான்(electrically neutral ) - பிரம்மா -
அந்த கதை படி அந்த நிகழ்வின் பொது தான் இந்த பிரபஞ்சம் உருவானது என்று சொல்வார்கள். அதையும் தான் பார்ப்போமே.
விஷ்ணுவும் பிரம்மாவுக்கும் இடையே சண்டை யார் பெரியவர் என்று. சக்தியாய் சிவன் அவர்கள் இருவரின் நடுவே ஜோதி பிழம்பாய்.விஷ்ணு அடியை தேடி செல்ல, பிரம்மா முடியை தேடி செல்ல.. அறிவியல் பெயர் வைத்து பாருங்கள். அறிவியலில் என்ன நிகழ்வு அது? அணு பிளவோ?! (அறிவியலில் அது தனி பிரிவு ஏதோ nuclear science ஆம் ஏதோ சொல்றாங்க அது எதுக்கு நமக்கு. நமக்கு தான் அறிவியல் படிச்சாலே தூக்கம் வந்திருமே நாம கதையை பார்ப்போம் )
ஏன் பிரம்மாவும் விஷ்ணுவும் அவதாரம் எடுத்து தேடனும் ? உள்ளபடியே தேட வேண்டியது தான? பிறகு எதற்கு அவதாரம்? அதுக்கு வேற அறிவியலில் என்னென்னமோ சொல்றாங்க ப்ரோடோனும் நியூட்ரான்நும் பிரிஞ்ச என்ன்னேமோ ஆகுதுன்னு விடுங்க அறிவியலில் ரொம்ப ஆழமா போக வேண்டாம்.
அப்ப கதையில் வரும் தாலம்பூ? - (ஹானி வூர்வேர்ப் ஏதோ சொல்றாங்க.மேலே உள்ள படத்தை பாருங்களேன்)
அணுவை எப்படி பிளப்பது?(nuclear fission )
அணுவை பிளந்தால் என்ன நடக்கும்? அதை பற்றி நன்றாய் அறிந்தவர்கள் என்ன எல்லாம் நடக்கும் கூறுங்களேன். அதுவும் இந்த கதையில் உள்ளதும் ஒத்து போகிறதா பாருங்களேன்.
நான் இதை முழுவதுமாக விளக்கிக்கொண்டு இருந்தால் இந்த பதிவை இப்பொழுது பதிய முடியாது. வேறு சந்தர்பத்தில் முடிந்தால் விளக்குகிறேன் இல்லை உங்களுக்கு கேள்விகள் இருப்பின் கேளுங்கள் பதில் அளிக்கிறேன். முழு அறிவியலையும் இந்த பதிவில் வெளியிடுவது சாத்தியம் அல்ல. ஆகையால் உங்கள் தேடலையும், பார்வையையும் சீர் தூக்கும் ஒரு சிறு பதிவு தான் இது.
எளிமைய தெரிஞ்சிக்க
"சின்ன பையன்" கேள்வி பட்டது உண்டா? அது தாங்க little பாய் - ஜப்பான் (ஹிரோஷிமா, நாகசாகி) சும்மா சின்ன பையனின் விளைவே எப்படி இருக்கு நாம் பார்த்துகொண்டு இருக்கிறோம். பிறகு இந்த பிரபஞ்சம் உருவாகும் போது எப்படி இருந்திருக்கும்?.
மிக சரியாக மிக துல்லியமாக அறிவியலில் இன்னும் கண்டு பிடிக்க படாத நிறைய விசயங்கள் நமது கதைகளில் உண்டு.அவை அனைத்தும் கதைகள் மட்டும் அல்ல மிக ஆழமான அறிவியல்.
என்ன தலை சுத்துதா? எவ்வளவு பெரிய விசயத்தை எத்தனை எளிமையாக, அனைவருக்கும் புரியும் படி சொல்லி சென்று இருக்கிறார்கள். இன்னும் உங்களால் நம்ப முடியவில்லையா?
அப்போ அந்த முன்றாவது - எலக்டிரான் யார்?(ன்னு). பதில் சொல்லிறவேண்டியதுதான். யார் அது அவர் பேரை சுலபமா சொல்லுவாங்க. திரிலோக சன்ஜாரின்னு - அட நாராயணா ... அவரே தான் நம்ம நாரதர்.
இவர் பிரம்மனின் மகன் என்று சொல்வார்கள் ஆனால் எப்பொழுதும் நாராயணா நாராயணா தான்..
எலக்டிரான் என்ன செய்யும்- புரோட்டான்,நியூட்ரானை சுத்திக்கிட்டே இருக்கும். அப்ப இன்னொரு லோகம்? புரோட்டான்,நியூட்ரான் எதுக்குள்ள இருக்கு? 3 லோகம் ஆச்சா?
நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம். ஒரு நாள் அவர் கலகம் பண்ணாட்டி அவர் மண்டை வேடுச்சிருமாம். விளக்கம் தேவையா? அறிவியல் பயின்றவர்கள் யாவரும் அறிந்ததே.
கதை மட்டும் அல்ல. இன்னும் நிறைய உண்டு.
நம் கதைகளில் சொல்லப்படும் கடவுள்களை பற்றி ஏளனம் செய்யும் பிற மதத்தவரும், பகுத்தறிவு பேசித்திரியும் பன்னாடைகளும். இந்த கடவுள் ஏன் இப்படி இருக்கு, இந்த கடவுள் யாருக்கு பிறந்தவன், எப்படி பொறந்தான் இப்படி நிறைய பேசுவார்கள் அதன் ஆழம் தெரியாமல். அறிவியலில் 2 hydrogen நும் ஒரு oxygen நும் சேர்ந்தால் H2O வாம் அது தான் தண்ணியாம். எப்படி இந்த சேர்க்கை நடந்துச்சு? இதை எல்லாம் கேள்வி கேட்கலாமே. அதை பற்றி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கலாமே.
இதையெல்லாம் சாதாரண பாமரனுக்கு எப்படி புரியவைப்பது?
பகுத்தறிவு பேசுபவர்கள் ஏன் ஒரு அணு உலையின் உள் செல்லக்கூடாது? பகுத்தறிவு வாதி (வியாதி) தானே. கடவுள் இல்லைன்னு சொன்னா அவன் பகுத்தறிவு மேதாவியாம். அவர்கள் எல்லாம் போலாமே. செய்வார்களா?
சிவா லிங்கத்தை கேலி பேசுபவர்கள் இதை ஏன் செய்யகூடாது அணு உலை லிங்க வடவமின்றி வேறு வடிவத்தில் அமைக்கலாமே. செய்வார்களா? மிக சாதாரண விசயம் சிவனை படத்தில் பார்பதற்கும், லிங்கமாய் வழிபடுவதையும் கூட ஏன் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள்.
லிங்க வடிவம் அந்த ஒரு வடிவம் மட்டும் தான் முழு சக்தியை உள்நிருத்தும் ஆற்றல் பெற்றது. வேறு எந்த வடிவத்தை விடவும் லிங்கவடிவில் சக்தியை உள்நிருத்தும் ஆற்றல் அதிகம். லிங்க வடிவத்தை உணராதவர்களுக்கு நல்ல எடுத்துகாட்டு அணு உலைகள் வடிவம்.
மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் படி அனுபவபூர்வமாக சொன்னவைகள் தான் இந்த கதைகள். கதைகள் மட்டும் அல்ல. நமது முன்னோர்கள் செய்து வைத்து சென்றவை யாரும் கற்பனை கூட பண்ண முடியாத விசயங்கள். உதாரணமா சிலவற்றை மட்டும் பார்போம்.
சனாதன தர்மத்தில் கோவில்கள், சிலை வடிவங்கள், வழிபடும் முறை, படைப்பவை அனைத்தும் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள் அல்ல.
அறிவியல் ஆய்வு கூடத்தில் கண்டிருப்பீர்கள் நிறைய சாதனங்கள், கண்ணாடி குடுவைகள், இன்னும் நிறைய. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் ஏன்? ஆய்வு கூடத்தை பற்றி தெரியாதவன் அறிவியல் பற்றி அறியாதவனுக்கு burette ,pipete ,conical flask etc . ன்னு சொன்னா என்ன புரியும்? அதுவே சனாதன தர்மம் பற்றி அறியாதவர்கள் செய்வது.
ஆகம விதிப்படி அமைய பெற்ற நமது கோயில்கள் எல்லாம் ஆய்வு கூடங்கள் மட்டும் அல்ல அவைகள் சக்தி கேந்திரங்கள். யார் உள் சென்று அதன் முறைப்படி முழு மனதுடன் வழிபடினும் அவர்கள் அனைவரும் (விஞ்ஞானம் அல்ல) மெய்ஞானத்தை உணர்வது நிச்சயம். நம் முன்னோர் அறிவியல் சொன்னது மட்டும் அல்ல நமக்காக செய்து வைத்திருகிறார்கள்.
இன்று நமது கோயில்களின் மகத்துவம் தெரியாமல் ஏதோ கோயிலுக்கு செல்கிறோம் வருகிறோம். இதில் மற்ற மதத்தவர் வேறு, கோயில்கள் அற்ற சிலைகள் அற்ற இந்தியாவை ஆக்குவார்கலாம்.
அய்யா புண்ணியவான்களே! கொஞ்சம் இதயம் இருந்தால், கொஞ்சம் அறிவு இருந்தால் மனிதம் என்று ஒன்று இருந்தால். மதத்தை விடுங்கள், அது யாருடையதோ விடுங்கள், கீழே உள்ளதை மட்டும் சற்று எண்ணி பாருங்கள் ஒரே ஒரு எடுத்துகாட்டை தருகிறேன்.
மதுரை மீனாச்சி அம்மன் கோயில் கேள்விபட்டது உண்டா? ஏதோ கோயில் அது மட்டும் தான் தெரியும். அதன் மகத்துவம் எதுவும் தெரிய வேண்டாம். அது கட்ட தொடங்கியது முடித்து எப்பொழுது தெரியுமா? அதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?
ஆரம்பித்தது 1216 - 1878 எத்தனை வருடங்கள்?
அந்த கோயில் கட்ட திட்டமிடவனுக்கு, அந்த சிற்பக்கலை செய்தவருக்கு, அரசனுக்கு, அப்பொழுது அங்கு வாழ்ந்த மக்களுக்கு அனைவருக்கும் நன்றாய் தெரியும் அந்த கோயில் கட்டுமானம் முடிக்கும் பொது அதை பார்க்க தாங்கள் மட்டும் அல்ல தன் அடுத்த சந்ததியால் கூட முடியாது என்று. அப்படி இருக்க அதை எப்படி திட்டமிட்டு முடித்திருப்பார்கள். ஒரு வருட இரண்டு வருட திட்டமிடல் இல்லை.அதற்கான தடை படாத பொருள் உதவி, தொடர்ந்து அதை செய்து முடிக்க ஆட்கள், படையெடுப்புக்கள், இயற்கை சீற்றங்கள் இப்படி எத்தனை காரணிகளை கடந்து எத்தனை தலைமுறை கடந்து அந்த கோயில் இன்று நமக்கு வழங்க பட்டிருக்கும். யாருடைய பெயருக்காகவோ, புகழுக்காகவோ இன்றி அதில் ஏதோ ஒரு ஆழ்ந்த பயன் கருதி செய்யப்பட்டது. அதை கூட புரிந்து கொள்ள முடியாமல் மதம் என்ற பெயரால் மதி கெட்டு பேசும் இவர்களால் இந்த சமூகத்திற்கோ, நாட்டுக்கோ, மக்களுக்கோ என்ன நல்லது செய்து விட முடியும்?.
நான் இங்கு சொன்னது ஒரே ஒரு கோயிலை பற்றி மட்டும் இப்படி நிறைய கோயில்கள் உண்டு. ஒவ்வொரு முறை அதை காணும் போதும் மனிதத்துடன் பார்த்தல் அதன் உண்மை புரியும்.
(உலக அதிசயங்கள் பட்டியல் வாக்கெடுப்பில் - மதுரை மீனாச்சி அம்மன் கோயிலும் இடம் பெற்று இருந்தது. அதற்கு வாக்களிக்க கூட நம்முள் பலருக்கு நேரமில்லை, முடியவில்லை வேதனையான வருந்தத்தக்க விசயம். உலக அதிசயங்கள் பட்டியலில் அதன் தேர்வு அவசியம் இல்லை தான். இருந்தும் அந்த கோயிலின் சிறப்பு பற்றி அறியாமல்... என்ன சொல்வது?? :((.. வார்த்தை வரவில்லை)
"கோவில் இல்லா ஊரில் குடி இருக்காதே" என்று சொல்வார்கள். நீங்கள் மெய்ஞானம் அடைய எதுவுமே செய்ய தேவை இல்லை. அந்த சக்தி கேந்திரத்தின் ஆற்றல் உங்களுள் அதை நிகழச் செய்யும்.
இந்த பதிவு இன்னும் முடியவில்லை தொடர்வோம் நம் தேடலில்.
பதிவின் நீளம் கருதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆய்வு முடிவு பற்றி அடுத்த பதிவில் தொடர்வோம்.மன்னிக்கவும். அதுவரை அவரின் முடிவு E =MC2(sq ) என்றால் என்ன என்று நினைவில் கொள்ளுங்கள்.
மறுபிறப்பு கோட்பாடு நிரூபிக்க முடியுமா? நிறைய பேர் கேட்கிறார்கள். ஐன்ஸ்டீன் கூட சேர்த்து அதையும் நிருபிச்சிருவோம்.
நண்பர்களே! உங்கள் தேடலையும், பார்வையையும் சீர் தூக்கும் ஒரு சிறு பதிவு தான் இது. எந்த ஒரு முடிவையும் எடுக்க அவசியம் இல்லை. உங்களுள் தேடல் இருக்கட்டும் மேலும் தொடர்வோம்...
டிஸ்கி :-
அப்போ அணுவை தான் ஹிந்துக்கள் கடவுளாக வழிபடுகிறார்களா? மேதாவிகளுக்கு பதில் - உங்கள் உடம்பு என்று சொல்வதில் - கோடான கோடி அணுக்கள் உள்ளது. அதில் ஒரு அணுவை பற்றி மட்டும் பேசினால் அந்த ஒரு அணு மட்டும் தான் நீங்களா?! காத்திருங்கள்... தொடர்வோம்
நண்பரே ,
ReplyDeleteஅருமை !!!! நேரம் இருந்தால் நம்முடைய லிங்க வழிபாட்டை பற்றி மேலும் விரிவாக விளக்குங்கள் அரபாத் நண்பருக்கும் சந்தேகம் உண்டு ...
நண்பர் ஷன்கர் அவர்களே,
ReplyDeleteஉங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
உங்கள் பதிவில் மறுமொழி விவாததிற்கு பிறகு திரு அரபாத் என்னுடன் கருத்து பரிமாற்றமோ,விவாதமோ செய்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இருந்தும் நீங்கள் கூறிய லிங்க வழிபாடு பற்றிய விளக்கங்களை கண்டிப்பாய் கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.
நன்றி.
@ தமிழன் ,
ReplyDeleteமிக்க நன்றி .. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நண்பர் தமிழன் அவர்களே,
தவறுதலாக உங்கள் பொங்கல் வாழ்த்து மறுமொழியை அழித்துவிட்டேன். மன்னிக்கவும்.
நண்பர் தமிழன் அவர்களே,
ReplyDeleteஎன் பதிவில் மறுமொழி வருவதே பெரிய விசயம் இதில் வேறு தவறுதலாக வந்த மறுமொழியை அழித்து விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.