Thursday, December 1, 2011

ஒரு பயணம்..


முந்தைய பதிவில் பார்த்த கதைக்கும் நமக்கும் என்ன தொடர்பு? நமக்கு எந்த சுரங்கமும் கிடைக்கவில்லை எந்த ஞானியும் நமக்கு சொல்லவில்லை. அப்படி இருக்க இந்த கதையை படித்ததால் என்ன பயன்? கேள்விகள் நியாயம் தான்.

அந்த விறகுவெட்டிக்கு பதில் நம்மை அங்கே பார்போம். பள்ளிபருவம் - தினம் பள்ளிகூடம் நமது சிந்தனை எப்படி இருந்தது? கல்லூரிக்கு சென்றால் சந்தோசமாக இருக்கும். நாம் கல்லூரிக்கு சென்றோம். கல்லூரி சென்றபோது படிப்பு முடிந்தவுடன் நல்ல வேலை கிடைச்சா ரொம்ப சந்தோசாம இருக்கும்.  கல்லூரி முடித்து வேலையும் வாங்கினோம். அப்பொழுதும் நமது எல்லை முடியவில்லை காதல், திருமணம், வீடு, குழந்தைகள், இன்னும் நல்ல வேலை இப்படியே எல்லை இல்லாமல் போய்கொண்டே தான் இருக்கிறது நமது தேவைகள்.இத்தனையும் எதற்காக செய்கிறோம்?. ஒரே ஒரு நிமிடம் கூட யோசிக்க நமக்கு நேரம் இல்லை. சமூகம் அப்படி இருக்கிறது அதை பார்த்து நாமும் அப்படியே.ஐம்புலன்கள் என்ன செய்கிறதோ அதை தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம். ஐம்புலன்களால் முடிந்தவை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வது மட்டும் தான் அவை ஒரு போதும் நமக்கு உணமைகளை உணர்த்தப்போவது  இல்லை.

அதை போலவே நாமும் எல்லையை தேடி ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்த்து ஓடிகொண்டிருக்கிறோம் அடிப்படை  புரியாமல்/தெரியாமல். ஒரு நிமிடம் யோசிக்கலாம் என்றால் அதற்குள் அடுத்தவர் நம்மை முந்தி சென்றுவிட்டால் அல்லது நேர விரையம் அல்லது போகறவரைக்கும் போகட்டும் அப்பறம் பார்போம் அந்த சிந்தனைகள் மட்டும்.சரி எங்கதான் போறோம் அதுவாவது தெரியுமா? அதுவும் கேள்விகுறியே. இப்போதைக்கு இந்த பிரச்சனைய தீர்த்தா நிம்மதி. இப்படி தான் நம் வாழ்க்கையை ஓட்டிகிட்டு  இருக்கோம். சுலபமா சொல்லகூடிய பதில் lifela செட்டில் ஆகணும் அவ்வளவுதான்  அப்பறம் மத்ததை பார்போம்.எனது அறிவிற்கு எட்டிய வரை lifela செட்டில் ஆகறது ஒண்ணே ஒண்ணுதான் - பிணம். மற்றவை எதுவும் செட்டில் ஆகறமாதிரி தெரியல. உங்களுக்கு அப்படி எதாவது தெரிந்தால் சொல்லுங்க.


பிணம் - உயிர் இல்லா உடல்- நம்மை பொறுத்தவரை உடலின் முடிவு.   பிறப்பில் இருந்து இறப்பு வரை நடப்பவை - வாழ்க்கை என்கிறோம்.

வாழ்வின் தொடக்கத்தை வைத்து அதில் இருந்து தேடிப்பார்ப்போம்.கருவில் உருவாகி பிறந்து,வளர்ந்து, முதுமை எய்தி, இறக்கிறோம். நம் உடல் வளர்ச்சி எதனால் நிகழ்ந்தது? சிறு குழந்தையாய் இருந்தபொழுது நமது அதே உடல் சிறிய அளவில் இப்பொழுது வளர்ந்து விட்டோம். இது எப்படி நிகழ்ந்தது? யாரேனும் நம்மை அப்படி செய்தார்களா?  எத்தனை நிமிடங்கள் யோசித்து இருப்போம்? நம்ம சாப்பிடறோம் அதனால வளர்ச்சி. அப்படி வைத்துகொள்வோமா? அப்படியானால் ஏதோ ஒரு அடித்தளத்தின் மேல் மேலும் மேலும் உணவுகளால் வளர்த்துகொண்டு இருக்கிறோம். கண்ணால் பார்க்கின்ற  வளரும் ஒன்றை நான் (நாம்) என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். அடித்தளம் அல்லது அடிப்படை (base) உணராமல். அடிப்படை /அடிதளத்தினுடன்  உடல் சேர்ந்து நான்(நாம்) என்றிருக்க கூடாதா?

இறப்பு - இறந்த பிறகு இந்த உடலில் செயல்கள் எதுவும் இல்லை. நம்மீது அன்பை பொழிந்தவர்கள் கூட இரண்டு நாட்களுக்கு மேல் நமது உடலை வைத்துகொள்ள விரும்புவது இல்லை. அப்படியானால் இந்த உடலின் உள்ளே ஏதோ ஒன்று இருந்து இந்த உடலை இயக்கிக்கொண்டு உள்ளது. அது என்ன? அது எப்படி இருக்கும் எப்படி பார்ப்பது அல்லது தெரிந்து கொள்வது? ஒருவேளை அதுவே நாம் தேடும் கடவுளாய் இருந்தால்????
" கைல எதையோ வைத்துகொண்டு எதுக்கோ அலைஞ்ச கதை "மாதிரி ஆயிடகூடாதுல. அதனால தான் "நான் யார்?"


இப்படியே பேசிகிட்டு இருந்தா நம்ம சரி/தப்பு இப்படி அறிவை சேர்த்துகிட்டு தான் இருப்போம். ஒரு பயனும் இல்லாத மாதிரி இருக்கு. 
ஒரு பயணம் போவோம்மா? உங்களிடமும் தேடல் இருந்தால் முயற்சித்து பாருங்கள் முழுமனதுடன். என் தேடல் பயணத்தின் ஒரு பகிர்வு. 

http://www.ishafoundation.org/Ishakriya - நன்றிகள் பல 

மேலே உள்ள இணையதளத்தில் உங்கள் பயணம் தொடங்கட்டும் 
முயற்சித்து பாருங்கள். நிச்சயமாய் உங்கள் உள்நோக்கிய பயணம் இனிமையானதாக அமையும். வாழ்த்துக்கள்.


உடம்பார்அழியில் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே. - திருமூலர் 

மேலே உள்ள பதிவுக்கும் இந்த வரிகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா ?!  ச்சே.. ச்சே ... நம்ம தேடுவோம்...

இதுவரை என் பதிவுகளில் கடைசியாக இட்ட பாடல் வரிகள் மிகவும் ஆழமான கருத்தை உணர்த்துபவை . அவைகளை சரியான முறையில் விளக்கும் ஞானம் எனக்கில்லை. மன்னிக்கவும்.

3 comments:

  1. நண்பரே , இந்த இணைப்புக்கு மிக்க நன்றி. காலையில் அவரின் வீடியோவை டவுன்லோட் செய்து , இப்பொழுது தியானம் செய்து முடித்தேன். தொடர்ந்து செய்ய எண்ணம். பார்க்கலாம்.

    ReplyDelete
  2. \\\lifela செட்டில் ஆகணும் அவ்வளவுதான் அப்பறம் மத்ததை பார்போம்.எனது அறிவிற்கு எட்டிய வரை lifela செட்டில் ஆகறது ஒண்ணே ஒண்ணுதான் - பிணம்.\\\\

    சரியாக சொன்னீர்கள் நண்பரே ..இன்று வேளை மற்றும் சம்பாத்தியம் செய்யும் ஒவ்வொருவரையும் கேட்டால் நான் life-la settle ஆகத்தான் உழைக்கிறேன் என்பார்கள் சரி ஓய்வு பெற்ற பிறகாவது ஆன்மிகத்தை நாடுகிறார்களா ? இல்லை, மீண்டும் ஓய்வூதியத்தின் மீதே சிந்தனை ஆகமொத்தம் நாம் நம் கடைசி காலம் வரை பணம்..!! பணம்..!! என்ற படியே ஓடி கொண்டிருக்கிறோம்...பிறகு என்ன பிணம் தான் அப்பத்தான் நாம அமைதியாக செட்டில் ஆகிறோம்... சரியாக சொன்னீர்கள் நண்பரே ..இன்று வேளை மற்றும் சம்பாத்தியம் செய்யும் ஒவ்வொருவரையும் கேட்டால் நான் life-la settle ஆகத்தான் உழைக்கிறேன் என்பார்கள் சரி ஓய்வு பெற்ற பிராகவது ஆன்மிகத்தை நாடுகிறார்களா ? இல்லை மீண்டும் ஓய்வூதியத்தின் மீதே சிந்தனை ஆகமொத்தம் நாம் நம் கடைசி காலம் வரை பணம்..!! பணம்..!! என்ற படியே ஓடி கொண்டிருக்கிறோம்...பிறகு என்ன பிணம் தான் அப்பத்தான் நாம அமைதியாக செட்டில் ஆகிறோம்...அருமையான கருத்துகள் நண்பரே .

    ReplyDelete
  3. @ Tamilan. மிக்க நன்றி நண்பரே,
    தொடருங்கள். அந்த இணைப்பில் கைபேசிக்கு ஆடியோ டவ்ன்லோடும் உள்ளது. ஆகையால் ஒரு நாளில் சிறிது நேரம் உங்களுக்காக ஒதுக்குங்கள்.வாழ்த்துக்கள்.

    @ ஷன்கர் - மிக்க நன்றி நண்பரே. அந்த பணம் பணம் என்று எதற்காக ஓடுகிறோம் அந்த கவனம் கூட இல்லாமல் ஓடிகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete