Thursday, December 22, 2011

ஆதியை நோக்கி...



பிரம்மா ஏன் அண்ண வடிவெடுத்து மேல் நோக்கியும், விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கீழ் நோக்கியும் செல்லவேண்டும்?

பிரம்மா கல்வியின் அதிபதி - கல்வி/அறிவு எப்பொழுதும் மேல் நோக்கி செல்பவை. எளிமையாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் சிந்திக்க உங்கள் எண்ணம் எல்லாம் மேல் நோக்கி செல்லும். நமது மூளைக்கு (தலையை நோக்கி) செல்லும்.

எதற்காக அன்னப்பறவை வடிவும் ? -  அன்னத்தின் சிறப்பு பாலும் நீரும் கலந்து இருந்தாலும் பால்-ஐ மட்டும் தனியாக பிரித்து உண்ணும் ஆற்றல் பெற்றது.

நம்மிடம் உள்ள அறிவு என்பது நல்லது தீது என பிரித்து - பகுத்தறியும் அறிவு மட்டுமே . நம் அறிவு இதுவரை நாம் சேர்த்து வைத்து இருப்பது எல்லாம் நம் ஐம்புலன்களால் சேர்த்தவை.  நம் ஐம்புலன்கள் செய்வது எல்லாம் ஒப்பிட்டு நமக்கு சொல்வது மட்டுமே.இப்படி தான் நாம் அறிவை சேர்கிறோம். (இதை படிக்கும் பொது கூட கருத்து  சரியா தவறா என்று நம் எண்ணம் நமது பழைய அறிவுடன் ஒப்பிட்டு கொண்டு இருப்பதை - விழிப்புணர்வுடன் இருந்தால் உணர முடியும்)   நாம் முன்பே இதை பார்த்தது தான்.
அதலால் எதற்காக அன்னப்பறவை வடிவமாக சொல்லப்பட்டது என்று இப்பொழுது உங்களது அறிவு ஆராய்ந்து இருக்கும்.

எதற்காக - தாழம்பூ? - வாசனை மிகுந்த பூ.நாம் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் பல நேரங்களில் நாம் சிந்தனையை /அறிவை இழக்கும் அல்லது மறக்கும் தருணங்கள் உண்டு . எடுத்துக்காட்டாக அழகிய பொருள்களை பார்க்கும் போது, மனதை மயக்கும் மணம்,சுவையான உணவு, இனிமையான இசை.   அப்பொழுது  எல்லாம் நமது அறிவு பகுத்தறியாது. (பகுத்தறிய ஆரம்பித்தால் நமக்கு அதன் அழகோ, மனமோ சுவையோ... உணரமாட்டோம்).  அதனால் ஏற்படும் தீமையை நாம் யோசிக்க மாட்டோம். நமது வாழ்வில் பலநேரங்களில் இது நமக்கு நிகழ்ந்திருக்கும்.
மற்ற பூ இருக்க ஏன் தாழம்பூ?மணம் மிக்க தாழம்பூவில் சிறுநாகம் குடியிருக்கும். பாம்புகள் அந்த மணத்தினால்  ஈர்க்கப்படும்  என்பது நான் கேள்விபட்டது(உண்மையா பொய்யா எனக்கு தெரியாது )
அப்படி இருப்பின்.
யோகா பற்றி தெரிந்தவர்களுக்கு அதன் உண்மை அர்த்தம் தெரியும்(நான் அதை விளக்க போவது இல்லை).
அனைவரும் சிந்திக்க எது உகந்ததோ அதை மட்டும் பார்போம். நம் தேடலில்  அறிவை மறந்து மனம் மயக்கத்தில் இது போல் சென்றால் ஆபத்துகள் உண்டு அதை விளக்குவதாக கொள்ளலாம்.

இதை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் இருப்பினும் இன்னும் இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள நிறைய இருப்பதால் ஒருசில உதாரணங்களுடன் சில விளக்கங்களுடன்  மட்டும் தொடர்வோம்.

விஷ்ணு (செல்வங்களுக்கு அதிபதி )-வராக அவதாரம் எடுத்து கீழ் நோக்கி சென்றது எதற்காக? எல்லா பொருட்செல்வங்களும் பூமியில் இருந்து பெறபடுவது  தான். எல்லாம் பொருட்செல்வங்களும் அழிவதும் பூமியில் தான்.    

வராக அவதாரம் - அதன் சிறப்பு என்ன ?- அது தனது குறிகோளில் எப்பொழுதும் தெளிவாக இருக்கும் அதற்கு எது வேண்டுமோ அதை அடையும்  வரை இடையில் எதுவாக இருந்தாலும் அதன் எண்ணம் எல்லாம் அதன் குறிகோளில் மட்டும் இருக்கும். அதற்க்கு உணவு தேவை எனில் அது மட்டும் தான் அதன் தேடலாக இருக்கும். உணவு பசிக்காகவா  அல்லது ருசிகாகவா எதுவும் அதன் எண்ணத்தில் இருக்காது. எது கிடைத்தாலும் உண்ணும் அதன் குறிக்கோள் உணவு அவ்வளவு தான். பெருக்கம் நிறைய ஏன் அத்தனை தெரியாது குறிக்கோள் பெருக்கம் அவ்வளவே.      

பொருட்செல்வத்தை குறிகோளாக கொண்டு தேடுபவர்களை பாருங்கள் அதன் அர்த்தம் புரியும்.பணம் என்றால் முதலில் அவர்களுக்கு அது மட்டும் இடையில் எதுவந்தாலும். நாலு காசு கிடைக்குதா அப்பறம் மத்ததை  பத்தி எனக்கு கவலை இல்லை எவன் எப்படி இருந்தால் எப்படி போனால் எனகென்ன. இப்படி தான் அவர்கள் எண்ணமெல்லாம் இருக்கும். எத்தனை கிடைத்தாலும் கிடைத்தன்  மதிப்பை உணராமல் ரசிக்காமல், ருசிக்காமல், மேலும் மேலும் போய்கொண்டே இருப்பார்கள் அதன் அருமை அறியாமல்.

போன பதிவில் ஏற்கனவே பார்த்து விட்டோம். ஏன் பிரம்மா தாழம்பூவை சாட்சிக்கு எடுத்துவந்தாரென்று. அதில் இன்னும் கருத்துக்கள் உண்டு. மேலோட்டமாக மட்டும் பார்போம். அவர் முடியை தேடி செல்லும் போது அவரது எண்ணம் எல்லாம் நமக்கு முன் விஷ்ணு சிவனின் அடியை பார்த்திருபாரோ என்ற சந்தேகம், அப்படி பார்த்திருந்தால் நாம் தோற்றுவிடுவோம் என்ற பயம் போன்றவை. ஆதலால் சாட்சிக்கு தாழம்பூ. 

கல்வி அறிவுமிக்கவர்களை பார்த்தல் அதன் பொருள் உங்களுக்கு தெரியும் நம்மையும் சேர்த்து தான் சொல்கிறேன். படித்தவர்களுக்கு எப்பொழுதும் தனது அறிவில், பயமும் சந்தேகமும் இருக்கும். படிக்காதவனை பாருங்கள் நாம் செய்வதை செய்ய சொன்னால் மிக எளிதாக செய்து விடுவான். நாம எல்லா பக்கமும் எல்லா வகையிலும் யோசிச்சு யோசிச்சு சரியா - தப்பா செய்வோம்.        
மெத்த படித்தவர்களை வீட்டில் அலுவலகத்தில் நிறைய படித்து முடித்த புத்தகங்கள் வைத்து இருப்பார்கள். கேட்டால் reference -க்கு. ஏன் படித்து முடித்தது தானே பிறகு ஏன் ? தனது அறிவில் சந்தேகம், பயம். 

எளிமையாக சொல்லவேண்டுமானால் யார் வீட்டில் மருந்துகள் அதிகமாக இருக்கும்? நோயாளி.. யார் வீட்டில் அதிகமாக புத்தகங்கள் இருக்கும்? - கண்டிப்பாய் அறிவாளியின் வீட்டில் இல்லை.

கதை படி விஷ்ணுவில் இருந்து வந்தவர் பிரம்மா. ஏன் அப்படி? நமது கல்வி எல்லாம் அனுபவத்தின் திரட்டு தான். காக்கும் கடவுள் விஷ்ணு (maintenance God ) வாழ்வின் அனுபவத்தில் இருந்து தான் நமது கல்வி அறிவு, படைக்கும் அறிவு எல்லாம் முதலில் உண்டானது.அதன் பிறகு பிரம்மா அவராகவே பகுத்தறிந்து படைக்க ஆரம்பித்ததின் பொருள்.அதை உணர்த்துவது தான் விஷ்ணுவில் இருந்து பிரம்மா வந்தது  

பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுளாய் இன்னொரு உடலாய் எண்ணும் வரை நம்முடன், நம் அறிவுடன் அவர்களை ஒப்பிட்டு கொண்டு மட்டும் தான் இருக்க தோன்றும்.

எல்லாவற்றிலும் அவர்களை உணரமுடியும். ஒரு நாள், ஒரு பொருள், ஒரு உடல்,நமது உடல்,பிரபஞ்சம் எதுவாகிலும் அதில் அவர்களை உணரமுடியும். 

இன்னும் இந்த பதிவு முடியவில்லை இன்னும் ஆழ்ந்த கருத்துகள் இதில் உண்டு. 
இன்னும் சிவனை பற்றி எதுவும் எழுதவில்லை ?!(இவன் ஒருவேளை சிவனை வழிபடுபவனாக (சைவம் சார்ந்தவனாக) இருப்பானோ ?- ) தொடர்வோம் அது வரை காத்திருங்கள்...

அறிவியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவரின் ஆய்வு முடிவுகள் பற்றி தெரியுமா? கொஞ்சம் அவரின் ஆய்வு முடிவை  நினைவில் கொள்ளுங்கள் எனது அடுத்த பதிவு படிக்கும் போது உதவும்.
   
உங்கள் கருத்துக்கள்,மாற்று கருத்துக்கள், கேள்விகள் எதுவாகிலும் மறுமொழியில் இடுங்கள். அது மற்றவர்களுக்கும் இந்த பதிவை இன்னும் செம்மையாக்க உதவும்.உங்கள் கேள்விகள் ஒவ்வொரு பதிவையும்  மட்டும் சார்ந்து இருந்தால் விளக்க எளிமையாக இருக்கும். நன்றி 
   

No comments:

Post a Comment