ஒரு சிறு முயற்சியாய் முதல் மூலத்தில் இருந்து என்னை தேடலாம்ன்னு ஆரம்பிச்சா ஒரே ஒரு கதை அதை ஆழமா பார்த்தாலே தலை சுத்துது.எல்லாமே அதில் அடங்கிவிடும் போல இருக்கு. சரி அது என்ன? என் அறிவிற்கு எட்டிய வரையில் உங்களுடன் பகிர்கிறேன்.
நமக்கு தெரிந்த கதை தான். முத்தொழில்களை (படைத்தல் ,காத்தல், அழித்தல்) செய்யும் கடவுள்கள் கதை தான்.முன்பு படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மா, காத்தல் தொழில் செய்யும் விஷ்ணு இருவருக்கும் இடையே பிரச்சனை நிறைய ஆண்டுகள் நடந்தது. வேற என்ன இருக்க முடியும் யார் பெரியவன்? நீயா? நானா? தான்
பிரம்மா - நான் படைப்பதால் தான் நீ காக்கிறாய் இல்லாவிடில் காத்தலுக்கு வேலை இல்லை அதனால் நான் தான் பெரியவன்.
விஷ்ணு - நான் காப்பதால் தான் நீ படைக்கிறாய். படைப்பதோடு உன்வேலை முடிந்தது. அதுவும் இல்லாமல் என்னுள் இருந்து வந்தவன் தான் நீ ஆகையால் நானே பெரியவன். - இப்படியே நிறைய சொல்லிகொண்டே போகலாம்.
நிறைய பேருக்கு இந்த கதை - கதையாய் தெரியும் ஆனால் அதனுள் இருக்கும் ஆழம்?! முடிந்த வரை பாப்போம். ஆதலால் கதையின் கருவை மட்டும் பார்ப்போம்.
இவர்கள் இருவருக்கும் சண்டை-அகங்காரத்தினால்*. அங்கு சிவன் (ஆழிக்கும் தொழில்*) செய்யும் கடவுள் அவர்கள் இருவர் முன் ஜோதி பிழம்பாக தோன்றி. யார் முதலில் அவரின் அடி அல்லது முடியை காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று முடிவெடுக்க முடிவானது.
பிரம்ம அன்னமாக மாறி சிவனின் முடியை தேடியும். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவரின் அடியை தேடியும் பல ஆண்டுகள் பயணம் செய்தும் அவரின் அடியையோ முடியையோ காண முடியவில்லை.
விஷ்ணு அவரின் தேடலில் தன் தவறை உணர்ந்து தோல்வியை ஒத்துகொண்டார். பிரம்மா தன் தோல்வியை ஒத்துகொள்ளாமல் மேலிருந்து விழுந்த தாழம்பூவை துணைக்கு அழைத்துக்கொண்டு தான் சிவனின் முடியை கண்டதாகவும் அதற்க்கு சாட்சியாய் தான் இந்த தாலம்பூவை கொண்டுவந்ததாகவும் கூறினார். இது ஒரு கதையாய் பெரும்பாலனவர்களுக்கு தெரியும். சிறுவனாய் இருந்த போது என் பாட்டியும், என் பெற்றோரும் எனக்கு சொன்னது(என் பாட்டி.என்னை பெற்றோர் பற்றி எதுக்கு இப்போ?! அதை பற்றி அப்பறம் சொல்றேன்).
இந்த கதையில் இருந்து எல்லா தேடலுக்கும் பதில் இருக்கிறது கண்டிப்பாய் ஒரு பதிவில் அத்தனையும் சொல்ல முடியாது ஆகையால் ஒவ்வொன்றாய் பார்போம்.
நாம் முதலில் (முதல் பதிவில்) தேடும் கடவுள் அதில் இருந்து என் விளக்கத்தை சொல்ல விளைகிறேன்.
கதை படியே பார்போம்
பிரம்மா யார் ? - படைக்கும் தொழில் செய்பவன். படைப்பதற்கு என்ன எல்லாம் தேவை? அறிவு, கற்பனை திறன், உருவாக்கும் திறன், சிந்தனை எல்லாம் வேண்டும். அதை தருவதற்கு கல்வி, அறிவு எல்லாம் வேண்டும். பிரம்மாவின் துணைவி யார்? - சரஸ்வதி தேவி அவர் - கல்வி, அறிவு கடவுள்.
அப்படியானால் பிரம்மா கல்வியை தரும் சரஸ்வதி தேவிக்கே அதிபதி.
விஷ்ணு யார் ? - காக்கும் தொழில் செய்பவன்.படைத்த ஒன்றை காப்பதற்கு என்ன எல்லாம் வேண்டும்? செல்வம், வசதிகள், வாய்ப்புகள் போன்றவை. விஷ்ணுவின் துணை யார்? - லட்சுமி தேவி அவர் - செல்வங்களுக்கு எல்லாம் கடவுள். அப்படியானால் விஷ்ணு செல்வம் தரும் லட்சுமி தேவிக்கே அதிபதி.
சிவன் ? - அழிக்கும் தொழில் - அழிப்பதற்க்கு தேவை சக்தி,ஆற்றல் போன்றவை - சிவனின் துணைவி பார்வதி தேவி - சிவன் சக்தியின் அதிபதி.
இதில் இருந்து யோசித்து பாருங்கள் - சக்தியாகிய சிவனின் அடியையும் முடியையும் தேடி சென்றவர்கள் யார்?
பிரம்மா - கல்விக்கு எல்லாம் அதிபதி ,
விஷ்ணு எல்லா செல்வங்களுக்கும் அதிபதி அவர்களே சக்தியின் அடியையோ முடியையோ பார்க்க முடியவில்லை (இப்போ - நம்ம?????) இதில் சொல்ல வருவது செல்வத்தாலோ, அறிவாலோ கடவுளை பார்க்க முடியாது. அது மட்டும்மா ? நான் ஏற்கனவே சொன்னது போல எல்லா தேடலுக்கும் இந்த தெளிவான கதையில் பதில் இருக்கிறது.
எவ்வளவு தான் செல்வம் சேர்த்தாலும், இருந்தாலும் நம் செல்வத்தேடலில் சிறிது நாட்களில் நமக்கு தடுமாற்றம், நம் தேடல் தவறானது என்ற எண்ணம் வரும் - அதுவே விஷ்ணுவிற்கு நடந்தது.
நம்ம எல்லாம் அறிவாளிங்க இல்ல. இதோ பிரம்மா - அறிவிற்கு அதிபதி என்ன சொன்னார் பார்க்காத ஒன்றை பார்த்ததாக சொல்ல ஒரு சாட்சியாய் தாளம்பூ. நாம் எப்பொழுதும் செய்வதுதான் தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்க மாட்டோம் அதுக்கு (proof ) ஆதாரம் தேடுவோம் அதுவே அங்கு நடந்தது.
அவ்வளவு தானா ? இன்னும் நிறைய இருக்கு காத்திருங்கள் தொடர்வோம்...
அதுவரை இந்த கதையில் உங்களுக்கு உதிக்கும் எல்லா கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாய் இந்த கதையில் பதில் உள்ளது அவ்வளவு தெளிவான ஆழமான கதை இது. எடுத்துக்காட்டாக ஏன் பிரம்மாமுடியை தேடி போகணும் அடியை தேடி போக கூடாதா? விஷ்ணு ஏன் அடியை தேடி போனார் முடியை தேடி போக வில்லை? உங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள்.
நம் பாரத மண்ணில் நம் முன்னோர்கள் கண்டிப்பாய் நமக்கு சொல்லிச் சென்றவை எல்லாம் மிகவும் ஆழ்ந்த தெளிவான கதைகள் கருத்துகள் தான். நமது கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம் போன்றவை விலை மதிக்க முடியாதவை. மற்ற மதத்திற்கு மாறியவர்களுக்கு இதன் அடிப்படை,நோக்கம் எதுவும் புரியவில்லை, தெரியவில்லை அதனால் தான். நம் நாடு அடிமைப்பட்டு கிடந்த பொது நாம் இழந்தவை மிக அதிகம் அதில் இவை போன்றவை ஏராளம்.
மற்ற மதத்தில் இருந்து இந்திய ஆன்மீகத்தை ஏளனம் பேசும் அனைவருக்கும் தெளிவான பதில் கூற என் தேடலுடன் இந்த பதிவு தொடரும்....
இந்த பதிவை நான் இப்பொழுது தொடங்கி எழுதுவதற்கு காரணம் நண்பர்கள் தமிழன் மற்றும் ஷன்கர் அவர்களால் தான். அவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
@ பிரபு :
ReplyDeleteஇந்தக்கதையில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. பழைய கேள்வி தான் என்றாலும், தங்களின் பதில் என்ன என்பதை எதிர்பார்கிறேன். ஏன் இந்த படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று பணியையும் ஒரே கடவுளால் செய்ய முடியாதா ???
@ அரபாத்,
ReplyDeleteவாருங்கள் அரபாத் உங்கள் வருகைக்கு நன்றி. கண்டிப்பாய் உங்கள் கேள்விக்கு தெளிவான பதில் இந்த பதிவு முடியும் முன் உங்களுக்கு கிடைக்கும். சூடான தோசையை ஓரத்துல இருந்து பிச்சுகிட்டு இருக்கேன் நேரா நடுவுல கைய வச்சா கை சுட்டுடும்.(என்னடா இவன் கேளிவிக்கு சம்பந்தம் இல்லாத பதிலா இருக்கேன்னு யோசிக்க வேண்டாம் ) ஒரு உதரணத்துக்கு சொன்னேன். கொஞ்சம் காத்திருங்கள்.
நன்றி