நீண்ட இடைவெளி தேடலுக்கு பின் மீண்டும் ஒரு பதிவுடன் உங்களை அடைவதில் மகிழ்ச்சி. இடைவெளிக்கு காரணம் எதை பற்றி பதிவிடுவது என்று தெளிவின்மை தான். உங்கள் மறுமொழிகளால் ஒரு தலைப்பை தேர்ந்தேடுபோம் என்று காத்திருந்தேன் அனால் அதற்க்கு வாய்ப்புக்கள் இல்லாததால் நண்பர் ஷன்கர் அவர்களின் பதிவில் பாதியில்(அவரின் அலுவல் மற்றும் வேறு காரணங்களால்) நீண்ட இடைவெளியுடன் நின்ற தலைப்பு பரமாத்மாவின் வடிவம் என்ன ? (1),) நண்பர் ஷன்கர் அவர்களுக்கு நன்றிகளுடன் இதை தொடர்வோம்.
பரமாத்மா, இறைவன் அவன் வடிவம் எப்படி இருக்கும்? கோவிலில் உள்ள சிலைகள் மாதிரியா? அல்லது சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் சொல்லிச் சென்றது போல் (அவர்கள் அதை தான் சொன்னார்களா?).அல்லது மற்ற மதத்தவர்/மார்கத்தவர் சொல்வது போல் எழு வானங்களுக்கு அப்பால் அமர்ந்திருப்பாரா?அல்லது பெரியார்/ நாத்திகர்கள் சொல்வது போல் அப்படி ஒன்றே இல்லையா? தேடி பார்போம் திறந்த மனதுடன்.
கடைசி கேள்வியில் இருந்து பரமாத்மா/இறைவன் இல்லை என்றால் இந்த பிரபஞ்சம், அண்டம் எல்லாம் எங்கு இருந்து எப்படி வந்தது? எல்லாம் இயற்கை அறிவியல் நிகழ்வு அப்படி என்றால் தானாய் நிகழ்ந்ததா? நிச்சயமாக அப்படி இருக்க வாய்ப்புகள் இல்லை.ஏதோ ஒரு சக்தி அல்லது ஏதோ ஒன்றின் காரணமாக தான் நிகழ்ந்திருக்க முடியும்.படைத் தவன் அன்றி ஒரு படைப்பு நிகழுமா? இங்க நாத்திகர்களின் பார்வை அவன் வடிவை வைத்து தான். கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் மடையன்,இப்படி இன்னும் நிறைய தொடரும். (அங்கு கடவுள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு 'நான்' 'என்னை' என்று போட்டால் எப்படி இருக்கும்? எப்படி நிரூபிப்பது?) அது நமது தலைப்பு அல்ல அதை வேறு ஒரு சந்தர்பத்தில் பார்ப்போம்.
மற்ற மதத்தவர்/மார்க்கதவர்கள் சொல்வது போல் மேலே அமர்ந்து இருப்பார் அப்படியானால் அவருக்கு ஒரு வடிவம் இருக்க வேண்டும். அவர் எப்படி எந்த வடிவில் இருப்பார் என்று அவர்கள் தான் சொல்லவேண்டும்.
சனாதன தர்மத்தில் கடவுளை எந்த வடிவில் உணர்கிறார்கள் என்று பா ர்ப்போம்
1 . சனாதன தர்மத்தில் அடிபடையாக கடவுளாய் நாம் வணங்குவது பஞ்ச பூதங்கள். நீர், நிலம் ,காற்று,நெருப்பு(அக்னி), ஆகாயம்.
பஞ்ச பூதங்கள் என்ன வடிவமோ? இவைகள் அனைத்தும் முழுமையானவை(பரிபூரணமானவை) முழுமை அற்ற எதுவும் இல்லை.பஞ்ச பூதங்களின் எல்லை என்பது எது?
அவற்றின் எல்லையை எப்படி முடிவுசெய்வது?
வடிவம் என்றால் நாம் சொல்லவருவது - எல்லை.(Boundries) (Outline )
அதுவும் நமது இந்த சிறிய அறிவை வைத்துகொண்டு மிக பெரியவன் என்று சொல்பவனை வரையறுக்கிறோம். இப்படி இருப்பார் அப்படி இருப்பார் இதை செய்வார் இப்படி எல்லாம் இருந்தால் தான் அவர் கடவுள் அதுவும் நீங்கள் நினைப்பது போல் நடந்தால் மட்டுமே அவர் கடவுளாய் இருக்க முடியும்.
எல்லைகள் இருப்பின் அது கடவுளாய்/பரம்பொருளாய்/பரமமாத் மாவாய் இருக்க முடியுமா?
பஞ்சபுதங்கள் அன்றி நமது இருப்பு சாத்தியமா?
உடல் - மண் (நிலம்) ,
சுவாசம் - காற்று ,
வெப்பம், - அக்னி (நெருப்பு)
நீர் ,
பரந்த மனம் - ஆகாயம் .
அதற்காக கல், மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றை போய் அறிவற்று கடவுள்/ இறைவன் அப்படின்னு சொல்றாங்க என்பது யாரின் மடமை?
நமது ஐம்புலன்கள் வெளிமுகமாக படைக்கப்பட்டவை . அவற்றின் மூலம் வெளிஉலகில் உள்ளவற்றை மட்டுமே(External) பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ, சுவைக்கவோ, நுகரவோ முடியும். நம்முள் நிகழ்வதை அவை நமக்கு உணர்த்தாது. ஆனால் நமக்கு எது நடந்தாலும், நாம் எதை தெரிந்து கொண்டாலும், நமது உடலின் மூலம் நமது அறிவால், மனத்தால், உணர்ச்சிகளால் மட்டுமே அது உணர/தெரிந்து கொள்ள முடியும் இது அடிப்படை.
சனாதன தர்மத்தில் சொல்வதை போல் கடவுள் எங்கும் இருக்கிறான் என்றால் நம் உள்ளும் நிச்சயம் இருப்பான். உங்களுள் இருப்பதை பார்ப்பது (உணர்வது) எளிதா? அல்லது வெளியில் கடவுளை தேடுவதா ? அதனால் நமக்கு முதல் படியாக கற்று தந்தது, பஞ்சபூதங்களை வணங்குவது.
சிறு குழந்தைக்கு எதாவது கற்று தர நாம் செய்வதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இது கை, கால், தலை என்று குறிப்பிட்டு காட்டுவோம்.அதை பார்த்து அது அதன் பெயர்களை கற்றுகொள்ளும். அதை போல தான் இது. உங்களுள் உணர வெளிமுகமாக கற்றுத்தர படுவது.
அடுத்த நிலை ......... வடிவம் பெரும் .........
அருமை , நண்பரே தொடருங்கள் , பின் தொடர்கிறேன்.
ReplyDelete@ தமிழன்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே. உங்கள் ஆதரவிற்கு.
நன்றி
ஆஹா, நீங்களும் நம்ம தொழில்தான் பண்றீங்க போலிருக்கே. இனி நாம் ஒண்ணா சேர்ந்து ஆப்பு செய்வோம், வைப்போம் நாத்தீகர்களுக்கு!!
ReplyDeleteWord Verification for feedback- இதை நீக்கி விடுங்கள் நண்பரே, பின்னூட்டம் இடுபவர்களை எரிச்சலூட்டும்.
ReplyDelete
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே!
நீங்கள் கூறிய Word verification நீக்கி விட்டேன் உங்கள் ஆலோசனைக்கும் நன்றி.
கண்டிப்பாக சேர்ந்து செய்வோம்.
நன்றி
அருமை
ReplyDelete