Sunday, November 20, 2011

எதற்காக கடவுள்?


நம்ம (நான்)இப்போ எதுக்கு கடவுளை தேடிக்கொண்டு இருக்கிறோம்? எதுக்கு தேடறோம்? கடவுள் இருக்காரா இல்லையான்னு கூட தெரியாமல்?
நிறைய பேர் சொல்லறாங்க கடவுள் இருக்கார்ன்னு நம்மளும் தேடித்தான் பார்ப்போமே. ஒருவேளை உண்மையாய்  இருந்தால் கேட்டது எல்லாம் கிடைக்கும் இல்லையா? இல்லாட்டி சில மதங்கள் சொல்வது போல் செத்ததுக்கு அப்பறம் சொர்க்கம். ஏதோ ஒரு பயன் இருக்கு உயிருடன் இருக்கும் போது   இல்லாட்டி செத்ததுக்கு அப்பறம். தேடித்தான் பார்ப்போமே. ஒருவேளை கடவுள் இல்லாமல் போனால் ஒண்ணும் இழப்பு இல்லை. அதுக்காகவா தேடுகிறோம்?.

சின்ன வயதில் இருந்தே கடவுள் இருக்கு நாம வணங்கனும் அப்படின்னு சொல்லி வளத்துட்டாங்க  அதுவே பழக்கமா போச்சு - அப்படியா?
வாழும் போது.....  
வாழ்கையில் கஷ்டமா? - கடவுளை கும்பிட்டா கஷ்டம் தீரும்.
வாழ்கையில் தேவைகள்? - கடவுளை வணங்கினால் கேட்டது கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்? - டாக்டர் கடவுள்.  
வாழ்கையில் நிம்மதி இல்லையா? - கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு 
வாழ்க்கை பயம்மா இருக்கா ?- சாமி பேர சொன்னால் கொஞ்சம் தைரியம்மா இருக்கு. 

இதை தாண்டி நமக்கு கடவுள் தேவை எதாவது இருக்கா?  அது வேணும் இது வேணும் காப்பாத்தனும் அவ்வளவு தான் அது கிடைச்சா போதும். இல்லாட்டி குறைஞ்ச பட்சம் கஷ்டமாவது வராமல் இருந்தால் போதும் . அதுக்காக வாழ்க்கை எல்லாம் ஏதோ நம்பிக்கையில் வணங்கிகிட்டு , தேடிக்கிட்டு இருக்கோம்.

இல்லை செத்த பின்னால..நரகத்துக்கு போகக்கூடாது  சொர்கத்துக்கு போகணும். வாழ்கையில் எல்லா கஷ்டமும் பட்டாச்சு செத்ததுக்கு அப்பறம் சந்தோசம இருக்கலாம். அதுக்காகவா கடவுள் ?இதுக்காகவா கடவுள்? ஒரே கொழப்பமா இருக்கே..? இல்லை

வேற என்னோவோ உருத்திக்கிட்டு இருக்கு என்ன அது ???

வாழும் போது 
கேட்டது எல்லாம் கிடைத்தால்
நினைத்தது எல்லாம் நடந்தால்  - சந்தோசம்மா....... இருக்கு . ஒரே ஜாலி தான்.  (சந்தோசம்மா இருந்தால் கடவுளை மறந்துவிடுகிறோம். (அது வேற விஷயம்). கஷ்டம் வந்தால் இல்ல வர்றமாதிரி தெரிந்தால் கடவுளை தேடறோம். இதுக்கு முடிவு தான் என்ன ?

சந்தோஷம் வரும் போது அப்படியே பிடிச்சு வச்சுகிட்டா கடவுளை தேடவேண்டியது இல்லை... அவர் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? சரியா? அப்பவும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு சந்தோஷம் போய்ட்டா? கடவுள் நாம அவரை கண்டுகலன்னு தண்டிசுட்டா? 

சரி மொதல்ல சந்தோஷத்த பிடிக்க முடியுதான்னு பாப்போம். முடியாட்டி அப்பறம் திரும்ப கடவுளை தேடுவோம்.

எப்போ எல்லாம் நமக்கு  சந்தோசம் வரும்?(பிடிச்சுவைக்கதான்

நல்லா சகல வசதிகளோட ஒரு வீடு கிடைச்சா? - அருமை அற்புதம்.. (சந்தோசம் தான் )
அப்பறம் கோடி கணக்க பணம் (சிபிஐ கேஸ் இல்லாம ;-)) எந்த பிரச்சனையும் இல்லாம நினைச்ச படி செலவு செய்ய - பெருமூச்சு விடவேண்டாம் கிடைச்சா சந்தோசம் தானே? அதுக்காக தானே பணத்து பின்னாடி ஓடிகிட்டு இருக்கோம் .
நினைச்ச மாதிரி படிப்பு, வேலை,  பதவி, தொழில் இத்யாதி இத்யாதி எல்லாம்...   
முக்கியமா நம்ம கனவுகண்ட மாதிரி காதலன்/காதலி,  கணவன்/மனைவி, குழந்தைகள்,உறவுகள் . - இன்னும் என்ன? ( அட ஏம்ப்பா வெறுப்பு ஏத்தர - Mind  வாய்ஸ் கேட்குது). கொஞ்சம் யோசிச்சுதான் பார்ப்போமே எங்கயாவது சந்தோசத்தை  புடிக்க முடியுதான்னு. புடிக்க முடிந்தால் அப்பறம் அதை அடைய முயற்சி செய்வோம். அப்ப தொனைக்குவேணும்ன்னா கடவுளை கூப்பிட்டுபோம். சரியா ?

நான் என்னையும் மற்றவர்களையும் பார்த்த வரை அது எல்லாம் கிடைச்சாலும் இன்னும் தேடல் நிற்கவில்லை. 
நல்ல வசதியான வீடு இருக்கறவங்க இன்னும் பெரிய வசதியான வீடு தேடறாங்க 
பணம் இருந்தால் இன்னும் நிறைய  பணத்த தேடறாங்க 
பதவில இருக்கறவங்க இன்னும் இன்னும் உயர் பதவி இப்படியே எல்லாத்துலயும் போய்கிட்டே இருக்கு அப்ப என்னதான் முடிவு இதுக்கு எல்லை தான் என்ன ? நினைச்சது எல்லாம் கிடைத்தாலும்  சந்தோஷம் கொஞ்சம் நாட்கள் இல்லாட்டி கொஞ்ச நேரம் தானா??? நினைச்சது கிடைச்சாலும் கொஞ்சம் நேரம் தானா நம்ம சந்தோசம்?  அப்பறம் திரும்ப அடுத்தது( Success is not a Destination its a Journey-  தத்துவம் ஹிஹி but what for success? ).  இப்படியே நாம என்னத்த தேடிகிட்டு இருக்கோம் கடவுளா? இல்ல சந்தோசாமா? (தேடற கடவுள் கிடைத்தால் எப்போவும் சந்தோசாமா ? அப்ப நமக்கு சந்தோசமா இருக்கனும் அதுக்கு கடவுள் தேவை இருக்கு மற்றபடி வேற எதுக்கும் நமக்கு கடவுள் தேவை இல்லை. சரியா ? 

இல்ல இது எல்லாம் தெரிந்தாலும் எனக்குள் இன்னும் வேறு ஏதோ ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கு. என்ன அது ? உங்களுக்கும் அது போல ஏதேனும் நெருடல் உள்ளதா? 

இப்பிறவியில் நாம் வாழும் காலம் 100 வயது (வாழ்ந்தால்) வரை எனில் எத்தனை நாட்கள் நாம் வாழ்கிறோம்? 100 X 365  = 36 ,500  நாட்கள் மட்டுமே. அதில் நம் வயது இப்பொழுது- கடந்த நாட்கள்? மீதம் ....??? (அதிகம் இல்ல gentleman /gentlewoman )   
கொஞ்சம் பயமாவும் கஷ்டமாவும் தான் இருக்கு.

அந்த ஒரு நாள் 24 மணிநேரம் நாம எப்படி கடத்தறோம்?சராசரிய 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் உறக்கம் மீதம் 8  மணிநேரம் எப்படி போகுதுனே தெரியல. 8 + 8 + 8 = 24 சரியா ?   
  
அப்படி இருக்க இந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒரு நிமிடம் கொஞ்சம் ஆழ்ந்து பார்போம். எல்லா நேரமும் வேற எதையோ தேடிகிட்டு இருக்கோம் காசு, படிப்பு , பதவி ,வசதிகள் , வாய்ப்புக்கள் இன்னும் பல இது எல்லாம் கிடைக்க நமக்கு ஒருவன் தேவை அவன் கடவுள் அவனையும் சேர்த்து தேடிக்கொண்டு இருக்கிறோம்.  எல்லாம் நமக்காக தேடிக்கொண்டு இருக்கிறோம்.நா(ன்)ம் யார் ? தேடிய தருணங்கள் எத்தனை?

என்னடா இது அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா நம்ம கிட்ட வந்து நிக்கறான்னு யோசிக்கறீங்களா? அப்ப முடிவு செஞ்சாச்சா? நா(ன்)ம் தான் கடவுள்ன்னு சொல்லவரான்னு? கண்டிப்பா இல்ல. நம்ம பார்க்கற எல்லாம் கடவுள் படைப்பு கடவுள் செயல் கடவுள் மிக பெரியவன் அப்படின்னா நாம எப்படி அவனை தேடறது இல்ல பார்க்கறது? அதுக்காக தான் கேட்டேன்  நா(ன்)ம் யார் ?ன்னு. சின்ன பூச்சி  மாதிரி இருந்துகிட்டு பெரிய யானைய எப்படி முழுசா பார்க்கறது(தேடறது)? பார்க்காம கண்டுபிடிக்காம விடபோறது இல்ல. 

முதல் உண்மை - நாம பிறந்த உடனே நிச்சயக்க பட்ட உண்மை. நமது இறப்பு கண்டிப்பாக. நம்ம எல்லாம் ஒருநாள் செத்து போயிடுவோம். இது உறுதி.. அதே போல் இன்னும் ஒரு உண்மையை தேடி... ... 

'நந்த வனத்தினில் ஓராண்டி - அவன் 
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி 
கொண்டுவந்தான் ஒரு தோண்டி - அதை 
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி!! ' 

இந்த பாடல் 4 வரில  ஏதோ சொல்ல வருது இல்ல? ச்சே.. ச்சே.. நாம யாரு? ... நாம தேடலை தொடர்வோம் ..       

No comments:

Post a Comment